ஆட்டம் காட்டும் சீனா.. இலங்கைக்கு விரைந்த இந்திய டாப் அதிகாரி.. கொழும்புவில் முக்கிய சந்திப்பு
கொழும்பு: இந்தியாவை விட சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இலங்கை மாறி உள்ளது. இதனால் ராஜதந்திர ரீதியாக உறவுகளை நெருக்கமாக்கும் விதமாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கொழும்பு வந்துள்ளார். இந்தியா இலங்கை இடையே நட்பு பலமடையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
சீனா இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து, அந்த நாடுகளில் முக்கியமான பொருளாதார திட்டங்களை எடுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான், இலங்கைக்கு சீனா கொடுத்துள்ள கடன் மிகமிக அதிகம்.
தனது நாட்டில் இல்லாத வளங்களை அங்கிருந்து குறைந்த முதலீட்டில் இறக்குமதி செய்வது, அதேநேரம் தனது நாட்டு பொருட்களை விற்கும் சந்தையாகவும் இலங்கை மற்றும் பாகிஸ்தானை சீனா பயன்படுத்தி வருகிறது. அதேபோல் பாதுகாப்பு ரீதியாகவும் தன்னை பலப்படுத்தி வருகிறது.

99 ஆண்டு குத்தகை
சீனா தனக்கு வர்த்தக ரீதியாக மற்றும் ராணுவ ரீதியாக போட்டியில் உள்ள நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பாகிஸ்தான், இலங்கையில் துறைமுகம், விமான நிலையம் போன்றவற்றை குத்தகைக்கு எடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இலங்கையின் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அருகில்
ஏற்கெனவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு தாரைவாா்த்து கொடுத்துவிட்டது. தற்போது, இரண்டாவதாக இலங்கையின் தலைநகரான கொழும்பின் மையப் பகுதியின் புதிய நகரத்தையும் சீனாவுக்கே அளித்துள்ளது. வரும் நாள்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதால் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும்அச்சம் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு மாநிலம் தான் இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்பதால், நாட்டின் உள்கட்டமைப்பிற்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்குதான் அதிகம் உள்ளன. இப்போது தமிழ்நாட்டிறகும் மிகவும் அருகில் உள்ள இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அச்சத்தை அதிகரித்துள்ளது-

இலங்கை நெருக்கடி
சீனாவிடம் அளவில்லாமல் பெற்ற கடனுக்கான வட்டியையும், அசலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியதால் இந்த நிலை உருவாகி உள்ளது. 2017-இல் இலங்கையின் மொத்த பொருளாதார வளா்ச்சியில் 50 சதவீதம் கடனாக மாறியது.கடன், வட்டியை செலுத்த முடியாமல் அப்போதைய அதிபா் ஸ்ரீசேனா, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு விட்டாா். இதில், 70 சதவீத உரிமையாளராக சீனாவும், 30 சதவீத உரிமையாளராக இலங்கையும் மாறி உள்ளது

தன்னிச்சையாக முடிவு
மேலும், துறைமுகத்தைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பையும் தொழிற்பேட்டை நகரமாக்க அளித்து சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலா்களை பெற்று அந்நிய செலாவணி கையிருப்பாக இலங்கை வைத்துக் கொண்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்காக சீனா பயன்படுத்தக் கூடாது என குத்தகை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டப் பணிகளை தொடங்கியது. துறைமுக நகரத்துக்காக 600 ஏக்கா் செயற்கை நிலப்பரப்பை சீனா உருவாக்கி உள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விரைந்த செயலாளர்
இப்போது விஷயத்திற்கு வரும் சீனா அளவுக்கு மீறி கடன் கொடுத்து தனது வலையில் இலங்கையை சிக்கவைத்துள்ள நிலையில், இந்தியா ராஜாங்க ரீதியாக உறவுகளை புதுப்பிக்க முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சனிக்கிழமை மாலை கொழும்புக்கு விமானம் மூலம் வந்துள்ளார். ஜனவரி மாதம் வெளியுறவு செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பொறுப்பேற்ற பிறகு, இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தியாவின் மிக நெருக்கமான அண்டை நாடான இலங்கைகு அவர் செல்வது இதுவே முதல் முறை.

எங்கெல்லாம் செல்கிறார்
தற்செயலாக, சனிக்கிழமையன்று கொரோனா ஊரடங்கு தடைகளை இலங்கையும் நீக்கி உள்ளது. இதனால் கொழும்பு சாலைகள் வாகனங்களால் நிரம்பியிருந்தன. ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா செவ்வாய்க்கிழமை வரை இலங்கையில் இருப்பார் மற்றும் அவர் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் இந்தியா உடன் உறவை பலப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications