கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்” காலம் எவ்ளோ வேகமா சுத்துது பாத்தீங்களா?

Google Oneindia Tamil News

கொழும்பு: 2009 இறுதி யுத்த காலத்தில் சிங்களர்களால் கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்சே இன்று அந்த மக்களாலேயே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது.

ராஜபக்சவின் தற்போதைய நிலை, "அரசியல் பிழைத்து அறம் கூற்றாகும்.. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்ற கருத்தை மெய்ப்பிப்பதாக உள்ளது.

“யார் வீரன்?” தப்பி ஓட தயாராகும் ராஜபக்ச.. இறுதி தோட்டா வரை களத்தில் நின்று மாண்ட பிரபாகரன்! “யார் வீரன்?” தப்பி ஓட தயாராகும் ராஜபக்ச.. இறுதி தோட்டா வரை களத்தில் நின்று மாண்ட பிரபாகரன்!

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

நமது அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சீர்கேட்டை அடுத்து அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள்,அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டங்களை ஒடுக்க நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.

வீடுகளுக்கு தீ வைப்பு

வீடுகளுக்கு தீ வைப்பு

இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகைக்கு வெளியே அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது அதிபர் கோத்தபயவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களும் தாக்குதல் நடத்தினர்.

தலைநகர் கொழும்புவில் வெடித்த வன்முறையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இலங்கையில் நிலவி வரும் வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியாகினர். பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என பலரது வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

மகிந்த ராஜினாமா

மகிந்த ராஜினாமா

நிலைமை கைமீறியதைத் தொடர்ந்து நேற்று இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்ச. தொடர்ந்து, அலரி மாளிகையை விட்டும் அவர் வெளியேறினார்.

இலங்கை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த ராஜபக்சே, மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொண்டாடப்பட்ட ராஜபக்ச

கொண்டாடப்பட்ட ராஜபக்ச

இலங்கையில் நடைபெற்ற 2009 இறுதி யுத்த யுத்த காலத்தில் மகிந்த ராஜபக்ச சிங்களர்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். ஒரு இயக்கத்தை அழித்தொழித்து நீண்டகாலமாக நிகழ்ந்து வந்த போரை நிறுத்திய தலைவராக ராஜபக்ச சிங்களர்களால் போற்றப்பட்டார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கும் தங்கள் ஆதரவை சிங்களர்கள் நீட்டித்து வந்துள்ளனர். அதன் சாட்சியாகவே, இன்று இலங்கையின் அதிபராக இருக்கிறார் கோத்தபய ராஜபக்ச.

சிங்களர்களாலேயே துரத்தப்படுகிறார்

சிங்களர்களாலேயே துரத்தப்படுகிறார்

இப்படியெல்லாம் ராஜபக்சவை கொண்டாடிய சிங்களர்களே, இன்று ராஜபக்ச வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்திருக்கிறார்கள். பேரினவாதத்தை கொள்கையாகக் கொண்டிருந்த ராஜபக்ச, சிங்களர்களாலேயே துரத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார். சிங்களர்களின் ஆதரவையும் இழந்துள்ள மகிந்த ராஜபக்சே இன்று பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், வெளிநாட்டுக்கு ரகசியமாகத் தப்பிச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் பிழைத்து அறம் கூற்றாகும்

அரசியல் பிழைத்து அறம் கூற்றாகும்

அரசியல் நீதியற்ற வகையில் இருந்தால் அது மக்களின் அத்தனை பண்பாட்டு விழுமியங்களையும் அழித்துவிடும். அநீதி மேலேங்கும். அதர்மம் தலைவிரித்தாதாடும். நாட்டு மக்கள் துன்பப்படுவர். இதை அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சிலப்பதிகாரத்தில் கூறியிருக்கிறார் இளங்கோவடிகள். ராஜபக்ச விஷயத்தில் இது இன்று உண்மையாகியிருக்கிறது.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

அவரவர் செய்யும் வினைகள் அவர்களை விட்டுப் போவது இல்லை. தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. ஒருவர் முன்னர் செய்த பாவங்களே பின்னாட்களில் ஏற்படும் துயரங்களுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களையும் அழித்தொழித்த பாவமே இன்று ராஜபக்சவை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Recommended Video

    ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட Mahinda Rajapaksa | mahinda rajapaksa resigns | Oneindia Tamil
    நீ விதைத்த வினையெல்லாம்

    நீ விதைத்த வினையெல்லாம்

    "நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்" எனும் வசனம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு முழுக்க முழுக்க உண்மையாகியிருக்கிறது. பேரினவாதம் எல்லாக் காலத்திலும் தமக்குப் பயனளிக்காது இப்போதாவது மகிந்த ராஜபக்ச உணர்ந்திருப்பார்.

    English summary
    Mahinda Rajapaksa, who was celebrated by the Sinhalese during the final war of 2009, is today being threatened by sri lankan people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X