இப்பவோ அப்பவோ! என்ன தான் ஆச்சு நித்யானந்தாவுக்கு? இலங்கை அரசு சொன்ன விளக்கம்! ஷாக்கான பக்தர்கள்!
கொழும்பு : சாமியார் நித்யானந்தா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்குமாறு அடைக்கலம் கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவ்வாறு யாரும் கடிதம் எழுதவில்லை என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது
இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார்.
அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர் அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். அந்தத் தீவுக்கு அதிபர் அவரே என்று கூறிக் கொண்டார்.
சமீபத்தில் உடல்நலக் குறைவால் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், தான் உயிரிழக்கவில்லை என்று தனது முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்த நித்யானந்தா, தமது புகைப்படத்தையும் அதில் பகிர்ந்தார்.

நித்யானந்தா
இந்நிலையில் கடந்த பல மாதங்களாக அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், கடந்த குரு பூர்ணிமா அன்று நேரலையில் பேசினார். பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் தோன்றியுள்ள நித்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இந்நிலையில், இலங்கையில் அவர் தஞ்சம் கோரி வருவதாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை மேற்கோள் காட்டி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.

மருத்துவ உதவி
ஏற்கனவே பொருளாதாரம் மற்றும் அரசியல் பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபருக்கு நித்யானந்தா எழுதியதாகவும், அதில், "ஸ்ரீ நித்யானந்தா பரமசிவனுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. கைலாசாவில் நித்யானந்தாவில் போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டு உள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கையில் தஞ்சம் அளிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.

இலங்கைக்கு கடிதம்
மேலும் மருத்துவ சிகிச்சைக்கான செலவை கைலாசா அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு தஞ்சம் அளித்தால் இலங்கைக்கு தேவையான முதலீட்டையும் அவர் வழங்குவார் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நித்யானந்த குறித்த யூகங்கள் மீண்டும் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன.

இலங்கை மறுப்பு
தோல் சம்பந்தப்பட்ட சில தொற்று நோய்களாலும் அவர் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்காக தான் அவர் மருத்துவ உதவி கேட்டு இலங்கையை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நித்தியான்ந்தா இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவ்வாறு யாரும் கடிதம் எழுதவில்லை என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications