Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை: மே 9 வன்முறைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்சேவிடம் போலீஸ் 5 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் மே 9-ந் தேதி நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மீதான ஊழல் வழக்கு விசாரணை செப்டம்பர் 21-ந் தேதி நட்டைபெற உள்ளது.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் அந்நாடு சீர்குலைந்து போயுள்ளது. பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணாததால் அந்நாட்டுக்கு அரசுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Srilanka Police grills Ex Prime Minister Mahinda Rajapaksa

இதனால் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த மே 9- ந் தேதி ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ராஜபக்சே ஏவிவிட்ட குண்டர்கள் கொடூரமாகத் தாக்கினார். இதனால் இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மே 9-ந் தேதியன்று மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக இல்லம், பெற்றோர் கல்லறை, ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் வீடு, உள்ளூராட்சி நிர்வாகிகள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என 100க்கும் மேற்பட்ட சொத்துகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. இந்த மோதலில் ராஜபக்சே ஆதரவு எம்.பி ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார். இதனால் உயிருக்கு அஞ்சி மகிந்த ராஜபக்சே கொழும்பைவிட்டு தப்பி ஓடினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ரணில் தலைமையில் அனைத்து கட்சி அமைச்சரவை பதவியேற்றுள்ளது. மேலும் மே 9-ந் தேதி வன்முறைகள் தொடர்பாக 1,500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீசார் இன்று 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதனிடையே மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மீதான ஊழல் முறைகேடு வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+