Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஷாக்! மூக்கில் ஆபரேசன்.. கண் பார்வை பறிபோன பரிதாபம்! கலகலத்த கடலூர்.. பறந்த புகார்!

Subscribe to Oneindia Tamil

கடலூர் : கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பார்வை பறிபோனதாகவும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என உறவினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா, கால் வலியால் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு பிரியாவின் கால் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் மருத்துவர்களின் அலட்சியமே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும் காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கவன குறைவாக செயல்பட்டதால் மரணம் விளைவிக்க காரணமாக இருந்ததாக கூறி மருத்துவர்கள் இரண்டு பேர் மீது 304 ஏ என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கை மாற்றியுள்ளனர்.

 மீண்டும் ஷாக்

மீண்டும் ஷாக்

இரு மருத்துவர்களும் தலைமறைவாக இருப்பதால், அவர்களது வீடுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூக்கு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பார்வை பறிபோனதாகவும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என உறவினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி, உமாவதி என்பவர் மனு அளித்தார்.

கண்ணில் கருப்பு துணி

கண்ணில் கருப்பு துணி

அவருடன் அவரது உறவினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்திருந்தனர். உமாவதி அளித்த மனுவில் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி மூக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். 12ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது ஆனால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் எனது இரு கண்களும் வீங்கின. மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியும் சரியான பதில் இல்லை கண்கள் குணமாகும் என கூறி வீட்டிற்கு அனுப்பினார்.

தவறான சிகிச்சை

தவறான சிகிச்சை

எனது கண்களை சரி செய்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தொடர்ந்து தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஒரு சிறுவனுக்கு கையில் தவறான அறுவை சிகிச்சை செய்ததாகவும், ஒரு பெண்ணுக்கு வயிற்றுடன் சேர்த்து குடலை வைத்து தைத்ததாகவும் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அந்த புகாருக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு கண்பார்வை பறி போனதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் அலட்சியம் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க வேண்டுமென்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+