திரௌபதி முர்முவுக்கு.. வாக்களித்த எதிர்க்கட்சி எம்பி & எம்எல்ஏக்கள்! அடேங்கப்பா.. இத்தனை பேரா!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளது தெரிய வந்துள்ளது.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24இல் நிறைவடையும் நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டெல்லியில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாக பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தன. அதன் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர். இருவரும் நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டினர்.

ஆதரவு
இந்த குடியரசு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தன. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சுமார் 3 ஆண்டுகளாகக் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த சிவசேனா ஆகியவையும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தது.

வெற்றி
இதனால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் திரௌபதி முர்மு அதிக வாக்குகளைப் பெற்றார்.மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 64 வயதாகும் திரௌபதி முர்மு வெற்றியை உறுதி செய்தார். இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர். மேலும், இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்..

வாக்குகள் எத்தனை
மூன்றாவது சுற்று முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2161 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் எஸ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். அதேபோல யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகும். கடந்த காலங்களில் ராம்நாத் கோவிந்த்திற்கு 65% வாக்குகளும், பிரணாப் முகர்ஜிக்கு 69% வாக்குகளும் நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாடீலுக்கு 65% வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

கட்சி மாறி வாக்களிப்பு
இதனிடையே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கட்சி உத்தரவைத் தாண்டி திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் சமயத்திலேயே சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாங்கள் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்து இருந்தனர். அப்படி மொத்தம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 17 எம்பிகக்கள் கட்சியின் உத்தரவை மீறி திரௌபதி முர்முவுக்காக வாக்களித்து உள்ளனர். அதேபோல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் 104 எம்எல்ஏக்களும் திரௌபதி முர்முவுக்காக வாக்களித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி மாறி வாக்களித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications