புதிய வாக்காளரை தேர்வு செய்ய... இனி ஆண்டுக்கு 4 தகுதி நாட்கள்...மத்திய அரசு
டெல்லி : 18 வயது பூர்த்தி அடைபவர்களை உடனுக்குடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதுநாள் வரை ஜனவரி 1ம் மட்டும் தகுதி அடிப்படை நாளாக இருந்து வந்த நிலையில், இனி ஆண்டுக்கு 4 நாட்கள் தகுதி ஏற்படுத்தும் நாட்களாக அறிவிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் 18 வயதை பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டியதில்லை. 3 மாதங்களில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் 140 கோடி மக்கள்
சுமார் 140 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 74 ஆயிரம் பிறப்புகளும், 30 ஆயிரம் மரணங்களும் நிகழ்கின்றன. அதன்படி இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 18 வயதை பூர்த்தி அடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் பேர். இந்திய அரசியல் சாசனத்தின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி உடையவர்கள். அதாவது வாக்காளர் அட்டை பெறவேண்டும் என்றால் கூட அவர்கள் 18 வயதை பூர்த்தி அடைய வேண்டும். இதுநாள் வரை ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு முன்னர் பிறந்த தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வந்தது.

புதிய ஓட்டர் ஐடிக்கு ஒரு காண்டு
இந்நிலையில் ஒருவர் ஜனவரி 2ம் தேதிக்கு பிறந்திருந்தால் அவர் புதிய வாக்காளர் அட்டைக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இதனால் ஒரே சமயத்தில் ஏராளமானவர்கள் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் சூழல் ஏற்படுகிறது. அதே சமயம் தேர்தல் வருகின்ற காலத்தில் கிட்டத்தட்ட 20 கோடி பேர் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.இந்த பிரச்சனைகளை சமாளிக்கவும் தேர்தல் நேரங்களில் கூடுதல் வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்கும் ஆண்டுக்கு 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை நிர்ணயிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.

3 மாதத்திற்கு ஒரு தகுதி நாள்
இந்நிலையில் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களிலும் 1ம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாட்களாக உருவாக்கப்பட உள்ளது. இதனால் புதிய வாக்காளர்கள் ஒரு ஆண்டு வரை காத்திருக்காமல் அதிகபட்சம் 3 மாதங்கள் காத்திருந்தால் போதுமானது. புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். தேர்தலின்போதும் சுமார் 15 கோடி வாக்காளர்கள் புதியதாக வாக்களிப்பார்கள். இதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை புதுப்பித்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கும் மாநிலங்கள் இந்த பட்டியலை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் வாக்காளர் அட்டை
புதிய வாக்காளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க www.nvsp.in மற்றும் https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களை பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் சமீபத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 6,28,094,531 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்களாக உள்ளனர். இதில்
3,09,17,667 ஆண் வாக்காளர்கள், 3,19,69,522 பெண் வாக்காளர்கள், 7,342 மூன்றாம் பாலினத்தவர் இருக்கின்றனர். சோழிங்கநல்லூர் (7,00,048) அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், சென்னை துறைமுகம் (1,76,679) குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications