Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Live updates: 5 மாநிலங்களிலும் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல்- வெளியானது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பஞ்சாப் உத்தரகண்ட் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

5 state assembly election date will be announced by Election Commission

Jan 08, 2022, 4:22 pm IST
உத்தரப்பிரதேசம்

5 மாநிலங்கள்- சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- வாக்குகள் எண்ணிக்கை

உத்தரப்பிரதேசம்: பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல். முதல் கட்டம்- பிப்ரவரி 10. 2-வது கட்டம்- பிப்ரவரி 14. 3-வது கட்டம்- பிப்ரவரி 20. 4-வது கட்டம்- பிப்ரவரி 23. 5-வது கட்டம்- பிப்ரவரி 27. 6-வது கட்டம்- மார்ச் 3. 7-வது கட்டம்- மார்ச் 7. பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா- பிப்ரவரி 14. மணிப்பூர்- பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 - 2 கட்டங்களாக தேர்தல். 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை- மார்ச் 10
Jan 08, 2022, 4:20 pm IST

7 கட்டங்களாக உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்

கட்டம் 1: பிப்ரவரி 10. 2வது கட்டம்: பிப்ரவரி 14. 3வது கட்டம்: பிப்ரவரி 20. 4வது கட்டம்: பிப்ரவரி 23. 5வது கட்டம்: பிப்ரவரி 27. கட்டம் 6: மார்ச் 3. 7வது கட்டம்: மார்ச் 7 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதி: மார்ச் 10
Jan 08, 2022, 4:16 pm IST

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் எப்போது முடிவடைகிறது?

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் எப்போது முடிவடைகிறது?
கோவா- மார்ச் 15 மணிப்பூர்- மார்ச் 19 உத்தரகாண்ட்- மார்ச் 23 பஞ்சாப்- மார்ச் 23 உத்தரப்பிரதேசம்- மே 14
Jan 08, 2022, 4:15 pm IST

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட தேர்தல்- தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Jan 08, 2022, 4:13 pm IST

7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Jan 08, 2022, 4:12 pm IST

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபால் வாக்களிக்கலாம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முன்னுரிமை
Jan 08, 2022, 4:10 pm IST

5 மாநிலங்களிலும் வாக்களிக்கும் நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்படும்- தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா
Jan 08, 2022, 4:08 pm IST

5 மாநிலங்களிலும் ஜனவரி 15ம் தேதி வரை பேரணிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணிக்கு தடை- தலைமை தேர்தல் ஆணையர்
Jan 08, 2022, 4:07 pm IST

வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டங்களுக்கும், வெற்றி ஊர்வலங்களுக்கும் தடை - தேர்தல் ஆணையர்
Jan 08, 2022, 4:06 pm IST
உத்தரகாண்ட்

2017 உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்

மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -70 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 36 கட்சிகள் வென்ற இடங்கள்: பாஜக-57 காங்கிரஸ்-11 சுயேட்சைகள்- 2
Jan 08, 2022, 4:05 pm IST
மணிப்பூர்

2017 மணிப்பூர் சட்டசபை தேர்தல்

மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -60 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 31 கட்சிகள் வென்ற இடங்கள்: காங்கிரஸ் - 28. பாஜக - 21. நாகா மக்கள் முன்னணி- 4. தேசிய மக்கள் கட்சி- 4. லோக் ஜனசக்தி-1. திரிணாமுல் காங்கிரஸ்-1. சுயேட்சை-1. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி. பாஜக இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி
Jan 08, 2022, 4:03 pm IST
உத்தரப்பிரதேசம்

2017 உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்

மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -403 கட்சிகள் வென்ற இடங்கள்: பாஜக- 312 சமாஜ்வாதி கட்சி- 47 பகுஜன் சமாஜ் கட்சி- 19 அப்னா தள் -9 காங்கிரஸ்- 7 சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி- 4 சுயேட்சைகள் - 3 ராஷ்டிரிய லோக் தள்-1 நிஷாத் கட்சி- 1
Jan 08, 2022, 4:03 pm IST

5 மாநில தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் cVIGIL என்ற செயலியை உருவாக்கியுள்ளது
Jan 08, 2022, 4:03 pm IST

cVIGIL செயலி மூலம் அரசியல் கட்சிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்
Jan 08, 2022, 4:02 pm IST

பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வீடியோ, ஆடியோ அல்லது தேர்தல் அத்து மீறலுக்கான ஆதாரங்களைப் பதிவேற்றலாம்
Jan 08, 2022, 4:02 pm IST

புகார்தாரரின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்
Jan 08, 2022, 4:02 pm IST

புகார் வந்த 100 நிமிடங்களில் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பார்கள்- தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Jan 08, 2022, 4:01 pm IST

தேர்தல் அட்டவணைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 5 மாநிலங்களிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது
Jan 08, 2022, 4:01 pm IST

தேர்தல் வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது
Jan 08, 2022, 4:00 pm IST

தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர்
Jan 08, 2022, 3:59 pm IST
பஞ்சாப்

2017 பஞ்சாப் சட்டசபை தேர்தல்

மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -117 கட்சிகள் வென்ற இடங்கள்: காங்கிரஸ்- 77 ஆம் ஆத்மி- 20 சிரோமணி அகாலிதளம்-15 பாஜக-3 லோக் இன்சாஃப் கட்சி-2
Jan 08, 2022, 3:59 pm IST
கோவா

2017 கோவா சட்டசபை தேர்தல்

மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -40 கட்சிகள் வென்ற இடங்கள்: காங்கிரஸ்- 17 பாஜக- 13 மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி- 3 கோவா மக்கள் முன்னணி- 3 சுயேட்சைகள் - 3 தேசியவாத காங்கிரஸ்-1 தனிப்பெரும் கட்சியாக காங். வெற்றி பாஜக இதர கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது
Jan 08, 2022, 3:51 pm IST

சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் 5 மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை

கோவா-40 மணிப்பூர்- 60 உத்தரகாண்ட்- 70 பஞ்சாப்- 117 உ.பி.-403 மொத்தம்- 690 தொகுதிகள்
Jan 08, 2022, 3:51 pm IST

வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும்
Jan 08, 2022, 3:51 pm IST

உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி
Jan 08, 2022, 3:50 pm IST

கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதி- தலைமை தேர்தல் ஆணையர்
Jan 08, 2022, 3:47 pm IST

ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்ய வசதி செய்து தரப்படும். தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்யலாம்- தலைமை தேர்தல் ஆணையர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு- சுஷில் சந்திரா
Jan 08, 2022, 3:47 pm IST

உ.பி. உட்பட 5 மாநிலங்களில் 690 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தகவல். 5 மாநில தேர்தலில் 18.34 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும்: தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா. 5 மாநிலங்களில் 24.9 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆகும்
Jan 08, 2022, 3:41 pm IST

கொரோனாவிற்கு மத்தியில் தேர்தல்களை நடத்துவதற்கான புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளோம்- தலைமை தேர்தல் ஆணையர். கோவிட் பாதுகாப்பான தேர்தல், பிரச்சினை இல்லாத தேர்தல், அதிகபட்ச வாக்காளர் பங்கேற்பு எங்கள் நோக்கம்- தேர்தல் ஆணையர்
Jan 08, 2022, 3:40 pm IST

உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல்: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா செய்தியாளர் சந்திப்பு துவங்கியது
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+