டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் பகவந்த் மான் - காலில் விழுந்து வணங்கினார்
டெல்லி: பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று டெல்லியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமது காலில் விழுந்து வணங்கிய பகவந்த் மானை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கெஜ்ரிவால்.
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்:

குஜராத் மாநிலம் காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் மண். கிராமப்புற வளர்ச்சி, சுயசார்பு கிராமங்களை உருவாக்குவதே காந்தியின் நோக்கம். இன்று, 'அமிர்த மஹோத்சவ்' கொண்டாடப்படும் நிலையில், காந்தியின் 'கிராமீன் விகாஸ்' கனவை நாம் நிறைவேற்ற வேண்டும்- அகமதாபாத்தில் பிரதமர் மோடி
Prime Minister Narendra Modi attends Maha-Panchayat Sammelan at GMDC Ground in Ahmedabad, Gujarat
— ANI (@ANI) March 11, 2022
Source: DD News pic.twitter.com/VNWFvcrYr8
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் மகா-பஞ்சாயத்துச் சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பாஜகவை எதிர்த்துப் போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. இனியும் காங்கிரசை நம்பி இருக்க முடியாது- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
NEWSUPDATE
கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் 6 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. 3 மாதத்தில் நாங்கள் பெரிய சாதனை செய்துள்ளோம். இது மனநிறைவான விஷயம் - மம்தா பானர்ஜி
எந்த மாநிலத்தில் யார் ஆட்சி?
உத்தர பிரதேச தேர்தலில் இவிஎம் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதை பற்றி விசாரிக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் தோல்வியை நினைத்து வருந்த கூடாது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி பகவன் சிங் மேன் மார்ச் 16ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருக்கிறார்
பஞ்சாப் முதல்வராக போகும் ஆம் ஆத்மி பகவன் சிங் மேன் அமிர்தசரஸில் மார்ச் 13ம் தேதி மாபெரும் பேரணி நடத்த உள்ளார். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருக்கிறார்
கோவாவில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் அங்கு முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
AAP's Punjab CM candidate Bhagwant Mann meets Delhi CM and party's national convener Arvind Kejriwal and party leader-Delhi Deputy CM Manish Sisodia in Delhi.
— ANI (@ANI) March 11, 2022
The party swept #PunjabElections2022 pic.twitter.com/k3VmZm04Wd
ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் முதல்வராக போகும் பகவத் சிங் மன் நேரில் சந்தித்தார்
5 மாநில தேர்தல் முடிவு மக்கள் கொடுத்த தீர்ப்பு. காங்கிரஸ் சில விஷயங்களை ஆராய வேண்டுமே தவிர கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - பஞ்சாப் காங். தலைவர் சித்து
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் பகவந்த் மான் - கெஜ்ரிவால் காலில் விழுந்து வணங்கினார்- பகவந்த் மானை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கெஜ்ரிவால்
NDA has got a second chance & it's a wonderful success. With this mandate, we have an even bigger responsibility towards UP's voters: Anupriya Patel, Union minister & Apna Dal (S) national president pic.twitter.com/mvvaoblDPT
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 11, 2022
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 2-வது முறையாக மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது; மிகப் பெரிய பொறுப்பு எங்களுக்கும் உள்ளது- மத்திய அமைச்சர் அனுபிரியா படேல்
You reap what you sow...This election was for a change...people took a great decision...public is never wrong...I'm not going into a deep thought of whether people accepted Channi's face as CM's candidate or not...: Congress Punjab Chief Navjot Singh Sidhu pic.twitter.com/gU6O8CbQDr
— ANI (@ANI) March 11, 2022
மக்கள் தந்திருக்கும் மகத்தான முடிவை ஏற்கிறேன். பொதுமக்கள் எப்போதும் தவறான முடிவை எடுக்க மாட்டார்கள்- காங். மாநில கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து
மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் மூலம் உத்தரகாண்ட் முதல்வர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணியை டெல்லி பாஜக தலைமை இவர்களிடம் ஒப்படைத்துள்ளது
பாஜக உத்தரகாண்டில் முதல்வரை தேர்வு செய்ய தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தோல்வியடைந்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது
பஞ்சாப்: முதல்வர் பதவியில் இருந்து சரண்ஜித்சிங் சன்னி ராஜினாமா
TWITTERUPDATE
மூத்த அதிகாரிகள், சில அமைச்சர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை. 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் நிலையில் யோகி திடீர் ஆலோசனை
Congratulations to my friend @ArvindKejriwal and Aam Aadmi party for their sweeping victory. It is commendable that within ten years since it's inception, the party has reigned victorious in another state, Punjab. pic.twitter.com/NGSXyrOLIj
— Kamal Haasan (@ikamalhaasan) March 11, 2022
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் 2-வது மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்துகள் - கமல்ஹாசன்
மாநில சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி பாஜகவுடன் மோதவில்லை; கோவாவில் நோட்டாவுடன்தான் சிவசேனா மோதியது. சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் நோட்டா அளவுக்குதான் ஓட்டுகள் வாங்கினர்- தேவேந்திர பட்னாவிஸ்
தேர்தலில் வாக்குகளை பிரித்த மாயாவதி, ஓவைசிக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கலாம்- சிவசேனாவின் சஞ்சய் ராவத் கடும் சாடல்
பஞ்சாப் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மார்ச் 16-ந் தேதி பதவியேற்க உள்ளனர். விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கத்கார் காலன் கிராமத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்தில் கால்பதிக்க ஏப்ரல் மாதம் யாத்திரை நடத்துகிறது ஆம் ஆத்மி கட்சி.
#WATCH "Negative campaigns succeeded in misleading... that BSP is BJP's B-team... while the truth is opposite, BJP vs BSP war was not only political but principled & electoral as well," says BSP chief Mayawati pic.twitter.com/SE9Jc6e0UU
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 11, 2022
பகுஜன் சமாஜ் கட்சியை பாஜகவின் பி டீம் என தவறாக பிரசாரம் செய்தனர்; பாஜக vs பகுஜன் சமாஜ் என்கிற யுத்தம் எப்போதும் தொடரும்: மாயாவதி
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் முடிவு : முந்தைய தேர்தல் முடிவுகளின் ஒப்பீடு
பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்து இருந்தால் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியாது. தலித்துகள் எங்கள் பக்கம் உறுதியாக நிற்கிறார்கள். முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர்- மாயாவதி
உத்தர பிரதேச தேர்தல்: டாப் 4 அரசியல் கட்சிகள்
...Before 2017 BJP did not have a good stake in Uttar Pradesh. Likewise today, Congress also undergoing the same phase as BJP...UP election result is a lesson for us to continue putting in efforts: BSP chief Mayawati pic.twitter.com/yq1xZAcf1A
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 11, 2022
சட்டசபை தேர்தல் எங்களுக்கு நல்ல பாடம்; இன்றைக்கு காங்கிரஸ் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் 2017 தேர்தலுக்கு முன்னர் பாஜக இருந்தது- மாயாவதி
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications