மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி 3 கேட்ட ஒலிம்பிக் கேள்விகள்.. உங்கள் பதிலையும் அனுப்பி பரிசு வெல்லலாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான 3 கேள்விகளை கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கான பதில்களை MyGov இணையதளத்துக்கு அனுப்பி பரிசுகளை வெல்லலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசியதாவது:

எப்போதுமே மனதின் குரலில் உங்களுடைய கேள்விகள் அடைமழை போல வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இந்த முறை, சற்று விலகி, நான் உங்களிடத்தில் வினா எழுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.

78th Episode of Mann Ki Baat : PM Modi asks Question on Olympics

சரி, என்னுடைய வினாக்களை சற்று கவனமாகக் கேளுங்கள்.

- ஒலிம்பிக் போட்டிகளில், தனிநபருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் யார் தெரியுமா?

......ஒலிம்பிக் போட்டிகளில், எந்த விளையாட்டுக்களில் பாரதம் இதுவரை அதிகமான பதக்கங்கள் வென்றிருக்கிறது?

......ஒலிம்பிக் போட்டிகளில் எந்த வீரர் அதிகபட்ச பதக்கங்களை வென்றிருக்கிறார்?

நண்பர்களே, நீங்கள் எனக்கு விடை அனுப்பினாலும் அனுப்பா விட்டாலும், MyGov தளத்தில் ஒலிம்பிக்குகள் தொடர்பான வினாவிடை இருக்கிறது, இதில் இருக்கும் வினாக்களுக்கு விடைகளை அளித்து பல பரிசுகளை வெல்லுங்கள்.

இதே போல நிறைய வினாக்கள் MyGov தளத்தின் Road to Tokyo Quiz, அதாவது டோக்கியோவுக்கான பாதை வினா-விடைப் போட்டியில் இருக்கிறது.

நீங்கள் இந்த Road to Tokyo Quizஇல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். முன்பு இந்தியா எப்படி செயல்பட்டது? இப்போது டோக்யோ ஒலிம்பிக்ஸுக்கான தயாரிப்புகள் என்னென்ன?

- இவை அனைத்தும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இந்த வினா விடைப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+