Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்'... தாத்தாவின் அன்பு குறித்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பதிவு

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: தனது தாத்தாவுக்கு வித விதமான உணவு வகைகளை கொடுக்க வேண்டும் என்று விரும்பிய பெண், தன் ஆசையை நிறைவேற்றுவதற்கு முன்பே தனது தாத்தா உயிரிழந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தாத்தா, பாட்டியின் அன்பு எப்போதுமே தனித்துவமானது தான். அத்தகைய ஈடு இணையற்ற அன்பை பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட சுயநலம் மிக்க அன்பை பொழியும் தாத்தா, பாட்டிகளுக்கு அவர்கள் விரும்பியவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும்.

அப்படித்தான் ரன்ஜூன் மிஸ்ரா என்ற பெண் மருத்துவர் இந்திய உணவு வகைகளை மட்டுமே அதிகம் சாப்பிட்டு பழக்கப்பட்ட தனது தாத்தாவுக்கு வித விதமான வெளிநாட்டு உணவு வகைகளை சாப்பிட கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

 மெக்சிகன் உணவு வகைகள்

மெக்சிகன் உணவு வகைகள்

மிகவும் வயதான நபர் என்பதால் தாத்தாவை வெளியே அழைத்துச்செல்ல முடியாது. இதனால், தனது ஆசையை நிறைவேற்றுவது எப்படி என்று எண்ணிய ரன்ஜுன் மிஸ்ரா, தானே அதை சமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் மிகவும் ருசியான மெக்சிகன் உணவு வகைகளை சாப்பிட கொடுத்துள்ளார். அவரும் மெக்சிகன் உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு ரன் ஜுன் மிஸ்ரா வெளிநாடு சென்றுவிட்டார். இந்தியா திரும்பும் போது, தனது தாத்தாவுக்கு வித விதமான உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்த வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்துள்ளார்.

 அதிகமாக கொண்டுவருமாறு கூறுவார்

அதிகமாக கொண்டுவருமாறு கூறுவார்

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ரன் ஜுன் மிஸ்ரா பதிவிட்டு இருப்பதாவது:-
எனது தாத்தாவுக்கு காரமான உணவு வகைகள் பிடிக்காது. அதேவேளையில் நான் கொண்டு வரும் மெக்சிகன் பெப்பர் சாஸ் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அதை விரும்பி சாப்பிடுவார். எப்போதும் அதிகமாக கொண்டு வருமாறு ஆசையோடு கூறுவார். என்று குறிப்பிட்டுள்ளார்.

 4 லட்சம் பார்வையாளர்கள்

4 லட்சம் பார்வையாளர்கள்

மேலும் அவர் தனது இறந்துபோன தாத்தா குறித்து இந்த பதிவை "உங்கள் தாத்தாவை பாசத்துடன் கட்டி அணையுங்கள்" என்ற கேப்ஷனோடு பகிர்ந்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் அவரது வீடியோவுக்கு பாசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நெட்டிசன் ஒருவர், ''என்னை ஒரே நேரத்தில் சிரிக்கவும், அழவும் செய்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர், ''சாப்பாடு பிளேட் மொத்தமாக காலியாகி இருப்பதை பார்க்கும்போதே அவர் அந்த உணவினை எவ்வளவு விரும்பி சாப்பிட்டுள்ளார் என்பது தெரிகிறது. என்னுடைய தாத்தாவும் இப்படித் தான் இருந்துருப்பாரோ என்னவோ? ஆனால் நான் என் தாத்தாவுக்கு எதுவும் சமைத்து கொடுத்ததே இல்லை என்பதை நினைத்து கவலைப்படுகிறேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், ரன்ஜுன் மிஸ்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவை பலரும் ஷேர் செய்து தங்களின் தாத்தா குறித்த நினைவுகளையும், அந்த பெண்ணுக்கு ஆறுதலாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்ரனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+