கவனம் மக்களே! இந்த நேரத்தில் தான் அதிக விபத்துகள் நடக்குதாம்.. புள்ளி விபரத்தை வெளியிட்ட மத்திய அரசு
புதுடெல்லி: இந்தியாவில் எந்த நேரத்தில் அதிகம் விபத்துகள் நடந்துள்ளது என்றும்.. கடந்த ஆண்டுகளில் எத்தனை சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது என்றும் நாட்டில் எந்த மாநிலத்தில் அதிக விபத்துகள் நடைபெற்றுள்ளது என்ற தகவல்களையும் மத்திய அரசு புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தனிநபர் வாகன பயன்பாடு பல மடங்கு அதிகரித்து இருப்பதே இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.
வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை கட்டமைப்புகள் ஏற்படுத்தாது மற்றும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிகளை மீறி செல்வது என பல்வேறு காரணங்கள் விபத்துக்கு பிரதான காரணமாக உள்ளது.

எத்தனை சாலை விபத்துக்கள்
விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் பல்வேறு சாலை விழிப்புணர்வு நடவடிக்கைகளும் விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றன. இருப்பினும், விபத்துக்களால் விலை மதிப்பு மிக்க உயிர்கள் பறிபோகும் சோகமும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனிடையே, 2021 ஆம் ஆண்டு எத்தனை சாலை விபத்துக்கள் நடைபெற்றது என்ற விவரத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எந்த நேரத்தில் அதிக விபத்துகள்
விபத்துக்கள் எந்த நேரத்தில் அதிகம் நடைபெற்றுள்ளது என்ற தரவுகளும் வெளியாகியுள்ளது. அதன்படி பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்து உள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 4.12 லட்சம் விபத்துக்களில் பிற்பகல் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் மட்டும் 1.58 லட்சம் விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. இந்திய சாலைகளில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பது ஆபத்தாக இருப்பது இந்த தரவுகள் கூறும் தகவலாக உள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி
அதேபோல, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை 6 மணிக்கு இடைப்பட்ட காலம் தான் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பாதுகாப்பான பயணமாக அமைந்து இருந்து இருக்கிறது. அதாவது இந்த குறிப்பிட்ட நேரத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான விபத்துக்களே நடைபெற்று இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளை போலவே 2021 ஆம் ஆண்டும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் அதிக விபத்துக்கள் நடைபெற்று இருக்கின்றன. அதாவது மொத்த விபத்துக்களில் இந்த நேரத்தி மட்டும் 21 சதவீத விபத்துக்கள் நடைபெற்று இருக்கின்றன.

நாட்டிலேயே தமிழகத்தில்தான்
அதற்கு அடுத்தபடியாக மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் மட்டும் 18 சதவீத விபத்துக்கள் நடந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 4,996 விபத்துக்கள் எந்த நேரத்தில் நடைபெற்றது என்ற விவரம் கிடைக்கப்பெறவில்லை என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மாநில வாரியாக பார்க்கும் போது நாட்டிலேயே தமிழகத்தில்தான் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் அதிக விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் 14,416 விபத்துகள்
தமிழகத்தில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் 14,416 விபத்துக்கள் நடைபெற்று இருக்கின்றன. அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 10,332 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. உத்தரபிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாலை 3 மணி முதல் 9 மணி வரை 82,879 விபத்துக்கள் நடைபெற்று இருக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட விபத்துக்களில் 52 சதவிகிதம் மாலை 3 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றுள்ளது.

1 மணி நேரத்துக்கு 18 உயிரிழப்புகள்
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் 1,53,972 உயிரிழப்புகள் நாடு முழுவதும் விபத்துக்களால் ஏற்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிக அளவு உயிரிழப்பு விபத்துக்களால் ஏற்பட்டது 2021 ஆம் ஆண்டில் தான். அதாவது ஒருநாளைக்கு மட்டும் 422 உயிரிழப்புகள் சராசரியாக ஏற்படுவகிறது. ஒரு மணி நேரத்திற்கு என கணக்கிட்டால் 18 உயிரிழப்புகள் நடப்பதாக தரவுகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications