பல லட்சம் ரூபாய் மிச்சம்.. வருமான வரியில் புதுமுறை தான் பெஸ்ட்.. உதாரணங்களுடன் முழுவிபரம்! இத படிங்க
மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பழைய வரி முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் எது சிறந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தனிநபர் வருமான வரிக்கான ஜீரோ வரி உச்சவரம்பு என்பது புதிய வருமான வரி முறையில் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு பெரிய விவாதமே தொடங்கி நடைபெற்று வருகிறது. அதாவது இந்தியாவில் வருமான வரி செலுத்துவதில் பழயை வருமான வரி முறை (Old Regime) சிறந்ததா? இல்லாவிட்டால் புதிய வருமான வரி (Ne Regime) சிறந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை இந்த செய்தியில் உள்ளது.
2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அவர் வெளியிட்டார். பட்ஜெட்டின் இறுதியாக தனிநபர் வருமான வரி சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இந்தியாவில் தற்போது வருமான வரி செலுத்த 2 நடைமுறைகள் உள்ளன. ஒன்று பழைய வருமான வரி முறை (Old Regime), இன்னொன்று புதிய வருமான வரி முறை (New Regime), இதில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரப்படலாம் என அனைவரும் எண்ணினர்.

பழைய வரி விதிப்பில் மாற்றமில்லை
அதன்படி இன்றைய பட்ஜெட்டில் பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பழைய வருமான வரி விதிப்பு முறையை கடைப்பிடிக்கும் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம். ரூ.2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5 சதவீதமும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை சம்பளம் அல்லது வருமானம் இருந்தால் 20 சதவீதமும், 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டி இருக்கும்.

புதிய வரி முறையில் சலுகை
மாறாக புதிய வருமான வரி முறையில் முக்கிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதாவது புதிய வருமான வரி முறையில் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில் அதனை ரூ.7 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக இருந்தால் அவர்கள் தங்களின் செலவீனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை முழுமையாக சமர்ப்பித்தால் மட்டுமே போதும். வருமான வரி செலுத்த வேண்டாம். மேலும் இந்த புதிய வருமான வரி முறையில் ஜீரோ வரி விதிப்பின் உச்ச வரம்பு ரூ.2.50 லட்சமாக இருந்த நிலையில் இது ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர் வருமான வரி ரிட்டர்ன்ஸ் கூட பைல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் இந்த பட்ஜெட்டில் புதிய வரி முறைக்கான Standard Deduction பலனை நீட்டிக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.15.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள ஒவ்வொரு சம்பளதாரர்களுக்கு ரூ.52,500 வரை வருமான வரியில் மிச்சம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தற்போது புதிய வருமான வரி முறை சிறந்ததா? இல்லாவிட்டால் பழைய வருமான வரி முறை சிறந்ததா? என்பது பற்றிய விவாதங்கள் தொடங்கி உள்ளன. பலரும் புதிய வருமான வரி முறை தான் சிறந்தது என தெரிவித்து வருகின்றனர்.

புதிய வரி முறையின் ஸ்லாப்
இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய வருமான வரி முறையின்படி இனி ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டாம். ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 5 சதவீதம் வரையும், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 10 சதவீதம் வரையும், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 15 சதவீதம் வரையும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 20 சதவீதம் வரையும், ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் செலுத்துவோர் 30 சதவீதம் வரையும் வருமான வரி செலுத்த வேண்டி உள்ளது.

புதிய வரி முறை தான் சிறந்ததாம்
மேலும் இந்த பட்ஜெட்டில் புதிய வரி முறைக்கான Standar Deduction பலனை நீட்டிக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.15.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள ஒவ்வொரு சம்பளதாரர்களுக்கு ரூ.52,500 வரை வருமான வரியில் மிச்சம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தற்போது புதிய வருமான வரி முறை சிறந்ததா? இல்லாவிட்டால் பழைய வருமான வரி முறை சிறந்ததா? என்பது பற்றிய விவாதங்கள் தொடங்கி உள்ளன. பலரும் புதிய வருமான வரி முறை தான் சிறந்தது என தெரிவித்து வருகின்றனர்.

மிச்சமாகும் வரிப்பணம்
இந்நிலையில் எது சிறந்தது என்பது பற்றி இந்தியாவின் முன்னணி வரி மற்றும் நிதி சார் மென்பொருள் தளமான கிளியர் கணக்கீட்டின்படி புதிய வரி முறை தான் மக்களுக்கு நன்மை பயக்கும் என அறிவித்துள்ளது. பழைய வரி செலுத்தும் முறையில் சில விலக்குகள் இருந்தாலும் கூட புதிய வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துவோர் அதிக பணத்தை வரி செலுத்தாமல் மிச்சம் செய்ய முடியும் என அது அறிவித்துள்ளது. உதாரணமாக 4 சதவீத கல்வி செஸ் கொண்ட ரூ.15 லட்சம் சம்பளத்திற்கு புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரி ரூ.1.56 லட்சமாக மட்டுமே இருக்கும். ஆனால் இது பழைய வரி முறையில் ரூ. 2.73 லட்சமாக இருக்கிறது. இதன்மூலம் புதிய வரி விதிப்பு முறையில் ரூ.1.17 லட்சம் வரை சேமிக்க முடியும். மேலும் ரூ.15.5 லட்சத்துக்கும் மேலான வருமானத்தில் புதிய வரி முறையில் Standard Deduction ரூ.50,000 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது இது ரூ.52,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வரி விதிப்பு முறையே சிறந்தாக உள்ளது. இதுதவிர அதிக வருமானம் பெறும் பிரிவினருக்கும் இந்த புதிய வரி விதிப்பு முறை தான் அதிக பயன் அளிக்குமாம். அதாவது ரூ.10 கோடி வருமானம் ஈட்டுவோர் பழைய வரி விதிப்பு முறையை ஒப்பிடும்போது புதிய வரி விதிப்பு முறையில் ரூ.38 லட்சத்து 87 ஆயிரத்து 324 வரை பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி முறைக்கு நகரும் அரசு
மேலும் உங்களின் வருமானம் ரூ.20 லட்சம் என எடுத்து கொண்டால் Standard Deduction முறையில் புதிய வரி விதிப்பில் வருமான வரி என்பது ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்த 220 ஆக மட்டுமே இருக்கும். ஆனால் இது பழைய வரி விதிப்பில் ரூ.5.85 லட்சமாக இருக்கும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்பது ரூ.1 லட்சத்து 17 ஆயிரமாகும். இதுபற்றி கிளியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சித் குப்தா கூறுகையில், ‛‛ பழைய வரி முறையில் 80C, 80D போன்ற சலுகைகள் பெற விரும்பாதவர்கள் புதிய வரி விதிப்பு முறையை பின்பற்ற விரும்பலாம். இது நிச்சயம் அவர்களுக்கு பயன் அளிக்கும். மேலும் தற்போது மத்திய அரசு பழைய வரி முறையை நீக்கம் செய்யவில்லை. இதனால் அதன்மீதும் நம்பிக்கை வைத்துள்ளது. ஆனாலும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. இந்த அரசு புதிய வரி முறையை நோக்கி நகர விரும்புகிறது'' என்றார்.

பல லட்சம் பேர் பயன்
இதுபற்றி பிஸ்டம் நிறுவனமான Tax2win இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அபிஷேக் சோனி கூறுகையில், ‛‛நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு இந்த ஆண்டு பட்ஜெட் பலபேரின் கனவுகளை நிறைவேற்றி உள்ளது. மாத சம்பளம் பெறுவோர், சிற வணிகர்களின் வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி விதிப்பு முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வருமானம் பெறுவோருக்கு வரி விதிக்கப்படுவது இல்லை என்ற அறிவிப்பால் பல லட்சம் பேர் பயனடைவார்கள்'' என்றார். ப்ரீயோ தலைமை நிதி அதிகாரி அங்கூர் மகேஸ்வரி கூறுகையில், ‛‛தனிநபர் வருமான வரியில் பெரிய அளவில் நிவாரணம் கிடைத்துள்ளது. மேலும் புதிய வரி முறையின் கீழ் Standard Deduction நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பான விஷயமாகும்'' என்றார்.












Click it and Unblock the Notifications