7 பேருடன் டெல்லி புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது.. வனப்பகுதியில் மீட்பு பணி தீவிரம்!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில், ஏழு பேர் பயணம் செய்த விமான ஆம்புலன்ஸ் இன்று விபத்துக்குள்ளானது. டெல்லிக்கு புறப்பட்ட நிலையில் டேக் ஆஃப் ஆன 35-வது நிமிடத்தில் ரேடார் தொடர்பு, விமானத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதில் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. ரெட் பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பீச்ராஃப்ட் C90 ரக விமானம் இது என விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA தெரிவித்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து 7 பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட 35 வது நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானது. இதனையடுத்து விமானத்தை தொடர்பு கொள்ள நடைபெற்ற முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.

சற்று நேரத்தில் விமானம் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்தது. இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்ட 41 வயதான சஞ்சய்குமார் என்பவர் பலியாகியுள்ளார்.
இந்த ஏர் ஆம்புலன்ஸில் ஒரு நோயாளி, ஒரு மருத்துவர், ஒரு பாராமெடிக், இரண்டு உதவியாளர்கள், ஒரு பைலட் மற்றும் கோ பைலட் என 7 பேர் பயணம் செய்துள்ளனர். சத்ராவில் உள்ள வனப்பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது. ரெட்பேர்டு ஏர்வேஸ் என்ற நிறுவனம் இயக்கி வந்த eechcraft C90 என்ற சிறிய ரக விமானம், ராஞ்சியில் 7.11 மணிக்கு புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்துள்ளது. மீட்புக்குழு நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளது. விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணைக்கு விரைந்துள்ளனர். விரைவில் கூடுதல் விவரங்கள் பகிரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications