டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரீசார்ஜ் கட்டணம் 25% உயர்வு.. மக்கள் அதிர்ச்சி.. ஏர்டெல்லை ஓவர்டேக் செய்த வோடபோன்

Google Oneindia Tamil News

டெல்லி: வருவாய் இழப்பிற்காக ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்திய நிலையில் வோடபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் நவம்பர் 26 மதல் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்த உள்ள நிலையில் வோடபோனும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்தக் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நிறுவனங்கள் முன்னணி

4 நிறுவனங்கள் முன்னணி

இந்தியாவில் செல்போன் சேவை வழங்குவதில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகின்றன. இவர்களுக்கு போட்டியாளர்கள் இவர்கள் மட்டுமே என்பதால் தங்கள் தேவைக்கேற்பே செல்போன் சேவை கட்டணங்களை தாராளமாக உயர்த்திக் கொள்கின்றன.

எத்தனை சதவீதம் விலையேற்றம்?

எத்தனை சதவீதம் விலையேற்றம்?

இதுநாள் வரை வசூலித்து வந்த கட்டணத்தில் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி வோடபோன்- ஐடியா நிறுவனமும் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 79 ரூபாய் வவுச்சர் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயாக ஆகவும், 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 149 ரூபாயிலிருந்து 179 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

28 நாட்கள் ரீசார்ஜ் வவுச்சர்கள்

28 நாட்கள் ரீசார்ஜ் வவுச்சர்கள்

தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 219 ரூபாயிலிருந்து 269 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 249 ரூபாயிலிருந்து 299 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 299 ரூபாயிலருந்து 359 ரூபாயாக உயர்த்தி வோடபோன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

56 நாட்கள் ரீசார்ஜ் வவுச்சர்கள்

56 நாட்கள் ரீசார்ஜ் வவுச்சர்கள்

தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 399 ரூபாயிலிருந்து 479 ரூபாயாக உயர்த்தியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 449 ரூபாயிலிருந்து 539 ரூபாயாக உயர்த்தி உள்ளது. தினமும் 6ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 379 ரூபாயிலிருந்து 459 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 599 ரூபாயிலிருந்து 719 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

365 நாட்கள் ரீசார்ஜ் வவுச்சர்கள்

365 நாட்கள் ரீசார்ஜ் வவுச்சர்கள்

இதேபோல் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 699ரூபாயிலிருந்து 839 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.24ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 1499 ரூபாயிலிருந்து 1799 ரூபாயாகவும், தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 2399 ரூபாயிலிருந்து 2899 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரியில் ஜியோ கட்டணம் உயர்வு

ஜனவரியில் ஜியோ கட்டணம் உயர்வு


இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் வருவாய் இழப்புகளை சமாளிக்க 15 முதல் 20 சதவீதம் வரை செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்தியிருந்தது. தற்போது நவம்பர் 26 முதல் ஏர்டெல் நிறுவனத்தின் செல்போன் சேவை கட்டணமும் உயர்கின்றது. எனவே ஒருமுறை மட்டும் புதிய கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் நவம்பர் 25ம் தேதிக்கு முன்னர் ரீசார்ஜ் செய்து 500 ரூபாய் வரை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.

English summary
Airtel and Jio have raised their cell phone service tariffs while Vodafone has also announced a tariff hike. Airtel is also set to raise mobile phone service charges from November 26, while Vodafone has also raised rates. The tariff hike is expected to take effect from November 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X