முகமது ஜுபைரின் போலீஸ் காவலை நீட்டித்த நீதிமன்றம்! சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
டெல்லி: மத உணர்வை தூண்டியதாக கூறி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு மேலும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
Recommended Video
Alt News இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். பத்திரிகையாளரான இவர் வலதுசாரிகளின் போலி செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிட்டு வந்தார்.
இவர் மதம்சார்ந்த விஷயங்கள் பற்றி தொடர்ச்சியாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர் மதம்சார்ந்த சிலரது நம்பிக்கைகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வலதுசாரி அமைப்பினரால் கடுமையாக விமர்சித்து வந்தார்.

விசாரணைக்கு சென்றவர் கைது
இந்நிலையில் அவர் ஜாமின் பெற்றுள்ள வழக்கு விசாரணைக்காகமுகமது ஜுபைர் சென்றார். அப்போது அவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்), 295A (மத உணர்வுகளை தூண்டி சமூக அமைதியை சீர்குலைப்பது) ஆகியவற்றின் கீழ் ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2018 ல் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் காவல் நீட்டிப்பு
இதையடுத்து அவரை போலீசார் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் மேலும் 4 நாள் அவரது போலீஸ் காவலை நீட்டித்து வழங்கியது. இதன்மூலம் 4 நாட்கள் அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் எதிர்ப்பு
முகமது ஜுபைரின் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் முகமது ஜுபைர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மன்றத்தின் இணை செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை செய்ய வேண்டும்
‛பேக்ட்செக்' இணையதளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைரை போலீசார் கைது செய்துள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறது. இன்னொரு வழக்கு விசாரணைக்கு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ம் ஆண்டுக்கான டுவிட்டர் பதிவு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது காவல்துறையின் அத்துமீறல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். இதனால் இந்த வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று நிபந்தனை இன்றி அவரை விடுதலை செய்ய வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications