டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகாலாந்து: 3 முறை ராணுவம் துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் 14 பேர் பலி- அமித்ஷா விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பொதுமக்கள் மீது ராணுவம் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் மொத்தம் பொதுமக்கள் 14 பேர் பலியானதாகவும் லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். மேலும் இனிமேல் இது போன்ற சம்பவம் நிகழாது என்றும் இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்துக்குரியது என்றும் அமித்ஷா கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று காலை முதலே நாகாலாந்து விவகாரம் எதிரொலித்தது. நாகாலாந்தில் 14 அப்பாவி சுரங்கத் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என சந்தேகித்து ராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதே கோரிக்கை லோக்சபாவிலும் வலியுறுத்தப்பட்டது.

 அமித்ஷா அறிக்கை தாக்கல்

அமித்ஷா அறிக்கை தாக்கல்

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகாலாந்து சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது: நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தின் ஓடிங் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

 இதுதான் நடந்தது?

இதுதான் நடந்தது?

ஓடிங் பகுதியில் 21-வது பிரிவு கமாண்டோக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வாகனம் சென்றது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட ராணுவத்தினர் முயற்சித்தனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனையடுத்தே ராணுவத்தினர் வாகனத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் அங்கேயே உயிரிழந்தனர்.

 2-வது முறை துப்பாக்கிச் சூடு

2-வது முறை துப்பாக்கிச் சூடு

இதன்பின்னரே வாகனத்தில் சென்றவர்களை தவறுதலாக ராணுவத்தினர் சுட்டதாக தெரியவந்தது. இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணுவத்தினரை தாக்கினர். ராணுவ வாகனங்களைத் தீக்கிரையாக்கினர். ராணுவ முகாமுக்கும் தீ வைத்தனர். இதனால் ராணுவத்தினர் தற்காப்புக்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த 2-வது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

3-வது முறை துப்பாக்கிச் சூடு

3-வது முறை துப்பாக்கிச் சூடு


இந்த சம்பவங்களுக்கு ராணுவம் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய விசாரணை நடத்துவதற்காக மேஜர் ஜெனரல் நிலையிலான ராணுவ அதிகாரி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

பொதுமக்கள் படுகொலை வருத்தம்

பொதுமக்கள் படுகொலை வருத்தம்

பொதுமக்கள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டது மிகுந்த வருத்தம் தரக் கூடியது. மத்திய அரசு இது தொடர்பாக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது. நாகாலாந்தில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Recommended Video

    ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை AFSPA திரும்பப் பெறுக: நாகாலாந்து முதல்வர் வலியுறுத்தல்
    30 நாட்களில் அறிக்கை

    30 நாட்களில் அறிக்கை

    இந்த சம்பவங்களுக்கு ராணுவம் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய விசாரணை நடத்துவதற்காக மேஜர் ஜெனரல் நிலையிலான ராணுவ அதிகாரி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாது என உறுதியளிக்கிறோம். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    English summary
    Union Home Minister Amit Shah said that a Special Investigation Team has been formed to probe the Nagaland incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X