உச்சத்தில் காற்று மாசு.. டெல்லியில் மூச்சு விட முடியல.. கெஜ்ரிவால் போட்ட அதிரடி உத்தரவு.. என்ன அது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காற்று மாசுக்கு டெல்லி, பஞ்சாப் அரசை மட்டும் குற்றம்சாட்டக்கூடாது. இது வட இந்தியாவுக்கான பிரச்சனை என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லி ஆண்டுதோறும் அதிகமாக மாசடைந்து வருகிறது. உலகில் மிகவும் மோசமான காற்று மாசு கொண்ட நகராக டெல்லி மாறி உள்ளது.

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தீபாவளி வேளைகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்தால், கனரக வாகனங்களின் பயன்பாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி காற்று மாசு

டெல்லி காற்று மாசு

இருப்பினும் கூட ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லியில் காற்று மாசு என்பது உச்சம் தொட்டு விடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் வைக்கோல் போர்கள் எரிக்கப்படுவது தான் காற்று மாசுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் கூட டெல்லியில் தற்போது காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காற்று மாசு தரக்குறியீடு மோசமான நிலைக்கு சென்றது தான் இதற்கு காரணமாக உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

இதற்கிடையே வாகன மாசுபாட்டை குறைக்க வாய்ப்பு உள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய வேண்டும் என ஆம்ஆத்மி அரசு கேட்டு கொண்டுள்ளது. இந்நிலையில் தான் இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் டெல்லியில் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்படும் வரை டெல்லியில் உள்ள தொடக்க பள்ளிகள் மூடப்படும். 5ம் வகுப்பு மேல் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ‛அவுட்டோர் ஆக்டிவிட்டிகள்' செய்யவிடாமல் தடுக்கப்படுவார்கள்.

தீவிர நடவடிக்கைகள்

தீவிர நடவடிக்கைகள்

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம். வாகனங்களுக்கான ஒற்றை-இரட்டை படை இலக்க எண் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட வேண்டி உள்ளது. தற்போதைய காற்று மாசு என்பது வடஇந்தியாவுக்கான பிரச்சனையாக உள்ளது. இந்த விஷயத்தில் டெல்லி, பஞ்சாப் அரசுகளை மட்டும் பொறுப்பாக கூடாது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+