டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூமியை நோக்கி அசுர வேகத்தில்.. மோதுவது போல் கிட்ட வந்து மேலே கடந்து சென்ற 'Asteroid OR2'

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு மைல் அகலமுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மேல நெருங்கி வந்து கடந்து சென்றது. இந்த கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Recommended Video

    பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்த சிறிய கோள்!

    உலகமே கொரோனாவால் பெரும்பாதிப்பை சந்தித்து உயிரை காப்பாற்ற போராடி வரும் இந்த நேரத்தில் 1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட 1998 OR2 என அழைக்கப்படும் ஒரு சிறியகோள், சுமார் 3.9 மில்லியன் மைல் தொலைவில், மணிக்கு 19000 கிலோமீட்டர் வேகத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணி அளவில் பூமிக்கு மேல் கடந்து சென்றது.

    இந்த கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் தற்போதைக்கு இல்லை என்றும் ஏனெனில் பூமிக்கும் அந்த சிறிய கோளுக்கும் இடையே பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் இருப்பதால் பயப்பட தேவையில்லை எனறு நாசா தெரிவித்தது. அத்துடன் பூமியில் இருந்து சந்திரனுக்கு இடையே உள்ள தூரத்தை 16 மடங்கு அதிகம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

    பறக்கும் தட்டுகள் உண்மைதான்.. 3 வீடியோக்களை வெளியிட்டு உறுதிபடுத்திய அமெரிக்கா!பறக்கும் தட்டுகள் உண்மைதான்.. 3 வீடியோக்களை வெளியிட்டு உறுதிபடுத்திய அமெரிக்கா!

    2020 ஹெச்எஸ் 7

    2020 ஹெச்எஸ் 7

    இதற்கிடையில், நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களை நேற்று இரவு பகிர்ந்தது. அதில் சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளது. இந்த பெரிய சிறுகோள் தவிர, ஒரு சிறிய சிறுகோள் பூமியை நோக்கி வந்தது. தற்போது கிரகத்திலிருந்து சுமார் 23,000 மைல் தொலைவில் (அதாவது 36,400 கி.மீ) உள்ளது அந்த சிறுகோள். அதற்கு 2020 ஹெச்எஸ் 7 என பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

    பிற்பகல் கடந்து செல்லும்

    பிற்பகல் கடந்து செல்லும்

    இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது, இது ஒரு புவியியல் நடவடிக்கை என்று நாசா தெரிவித்துள்ளது. புதன்கிழமை ஏப்ரல் 29 அன்று அதிகாலை 5:56 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு கடந்து செல்லப்போகிறது. இது பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக பூமியைக் கடந்து பாதுகாப்பாக முன்னேறும், நமது பூமியிலிருந்து எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தது.

    முகமூடி அணிந்து வருகிறது

    முகமூடி அணிந்து வருகிறது

    1.2 மைல் அகலமுள்ள விண்வெளிப் பாறை என்று அழைக்கப்படும் இந்த சிறிய கோளின் வருகையை புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகம் கண்காணித்து வருகிறது. இந்த சிறுகோளின் சமீபத்திய படம் தூசி மற்றும் அதைச் சுற்றியுள்ள குப்பைகள் காரணமாக முகமூடியை அணிந்திருப்பதைப் போல தோற்றமளிப்பதாக விஞ்ஞானிகள் நகைச்சுவையாக கூறினார்கள்.

    மலை முகடுகள்

    மலை முகடுகள்

    புவேர்ட்டோ ரிக்கோ ஆய்வகத்தின் கிரக ரேடார் தலைவர் டாக்டர் அன்னே விர்கி இதுபற்றி மேலும் கூறுகையில், "1998 OR2 சிறுகோளின் ஒரு முனையில் உள்ள மலைகள் மற்றும் முகடுகள் போன்ற சிறிய அளவிலான நிலப்பரப்பு அம்சங்கள் விஞ்ஞான ரீதியாக கவர்ச்சிகரமானவை. ஆனால் நாம் அனைவரும் கோவிட் -19 பற்றி யோசித்து வருவதால், இந்த அம்சங்கள் 1998 OR2 சிறு கோளை முகமூடி அணிந்து கொண்டு வருவது போல் தோற்றமளிக்கின்றன" என்றார்.

    விஞ்ஞானிகள் ஆய்வு

    விஞ்ஞானிகள் ஆய்வு

    இந்நிலையில் இந்த சிறுகோள் ஒரு PHO (அபாயகரமான பொருள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இது 140 மீட்டருக்கும் பெரியது மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து ஐந்து மில்லியன் மைல்களுக்குள் வரும். ஆனால் கோளிடம் இருந்து எதுவும் கிரகத்திற்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாது. எனினும் 2020ம் ஆண்டுக்கு பிறகு அது எவ்வாறு நகரும் என்பதைப் பார்க்க விஞ்ஞானிகள் தொடர்ந்து சிறுகோள் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

    3.5 மிக நெருக்கமாக வரும்

    3.5 மிக நெருக்கமாக வரும்

    புவேர்ட்டோ ரிக்கோ ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி ஃபிளேவியன் வெண்டிட்டி இதுபற்றி கூறுகையில், "பூமிக்கு எதிர்கால நெருக்கமான அணுகுமுறைகள் உட்பட, எதிர்காலத்தில் சிறுகோள் எங்கு இருக்கும் என்பதை ராடார் அளவீடுகள் இன்னும் துல்லியமாக அறிய அனுமதிக்கின்றன. 2079 ஆம் ஆண்டில், 1998 OR2 சிறுகோள் பூமியை இந்த ஆண்டை விட 3.5 மடங்கு நெருக்கமாக கடந்து செல்லும், எனவே அதன் சுற்றுப்பாதையை துல்லியமாக அறிந்து கொள்வது அவசியம் என்றார். "இந்த சிறுகோள் பூமியை பாதிக்கும் என்று கணிக்கப்படவில்லை என்றாலும், பாதிப்பு-அபாயத்தைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இந்த வகை சிறிய கோள்களின் பண்புகளைப் புரிந்துகொள்வது முக்கியம்" என்று டாக்டர் விர்கி தெரிவித்தார்.

    English summary
    Asteroid OR2 will pass near the Earth , know whether it is a threat to Earth. this asteroid set to pass within 3.9m miles of Earth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X