டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லா பாருங்க.. ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனையான ஆடு இதுதான்.. காரணம் கேட்டா அசந்துருவீங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இரண்டு ஆடுகள் நான்கரை லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.

ட்ரை ப்ரூட் உணவு மட்டுமே வழங்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆடுகள் இவை என்பது இவ்வளவு தூரம் விலையேறுவதற்கு முக்கிய காரணமாம்.

கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு

நாடு முழுக்க இன்று தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை எளியவர்களுக்கு, இஸ்லாமியர்கள் இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி தானம் செய்வது இன்றைய தினத்தின் சிறப்பம்சமாகும்.

ஒரு ஜோடி ஆடு 4.5 லட்சம்

ஒரு ஜோடி ஆடு 4.5 லட்சம்

இதையொட்டி பல்வேறு சந்தைகளிலும் ஆடு உள்ளிட்ட மாமிச விலங்கினங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள சந்தையிலும் ஆடுகள் அதிக அளவுக்கு விற்பனையாகி உள்ளன. லக்னோ நகரில் உள்ள கோம்தி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சந்தையில் ஒரு ஜோடி , ரூ.4.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

நல்ல எடை

நல்ல எடை

இதில் ஒரு ஆடு எடை 170 கிலோ, இன்னொரு ஆடு விலை 150 கிலோ. ஏன் இந்த ஆடுகளுக்கு மட்டும் இவ்வளவு விலை என்று கேட்கிறீர்களா.. அவற்றுக்கு கொடுக்கப்பட்ட உணவு தானியங்கள் அப்படிப்பட்டது. தினம்தோறும், இந்த ஆடுகளுக்கு உணவுக்காக மட்டும் சுமார் 600 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

முந்திரி, பாதாம்

முந்திரி, பாதாம்


ஆம்.. தினந்தோறும் முந்திரி கொட்டைகள், பிஸ்தா, பாதாம், பழச்சாறு, இனிப்பு பதார்த்தங்கள் உள்ளிட்டவை மட்டும்தான் இந்த ஆடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதன்காரணமாக இந்த ஆடுகள் புஷ்டியாக வளர்ந்துள்ளன.

சுகாதாரம்

சுகாதாரம்

தினந்தோறும் ஆடுகளுக்கு ஷாம்பு போட்டு குளிப்பாட்டி, மிகவும் சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டுள்ளது. அது மட்டும் கிடையாது.. இந்த ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அதன் உடல்நிலை சரிபார்க்கப்பட்டு வளர்க்கப்பட்டு இருக்கிறது.

கொழுக் மொழுக் ஆடு

கொழுக் மொழுக் ஆடு

இவ்வாறு சிறப்பு உணவுகள் கொடுத்து வளர்க்கப்பட்டதால்தான், ஆடுகள் நன்றாக இருப்பதோடு, அதன் இறைச்சி மிகுந்த சுவை உடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவேதான் நான்கரை லட்சம் ரூபாய்க்கு அந்த ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

English summary
A pair of goats sold for 4.5 lakh rupees in Lucknow, Uttar Pradesh on the eve of Bakrid. About 600 rupees is spent daily on food for these goats. Yes, only cashew nuts, pistachios, almond, juice and sweets are provided to these goats daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X