டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“தாமரை” குளமான இந்திய கிரிக்கெட்.. பிசிசிஐ, ஐபிஎலில் பாஜகவின் "வாரிசு" அரசியல் - திரிணாமூல் சாடல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தில் பாஜகவின் வாரிசு அரசியல் தொடர்வதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தெரிவித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கு பிசிசிஐ தலைவராக கடந்த நவம்பர் மாதம் சவுரவ் கங்குலி பதவியேற்றார். செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா பதவியேற்றனர். இவர்களின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய இருக்கிறது.

2 வது முறையாக இவர்கள் பதவி வகிக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் ஜெய்ஷா செயலாளர் பதவியில் தொடர்வார் என்றும், கங்குலி தலைவராக தொடர மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐசிசியில் கங்குலி வகித்த இந்திய பிரதிநிதிக்கான பொறுப்பும் ஜெய்ஷாவிடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் பாஜக கலவரம்.. யோகி மாடலில் “புல்டோசர்” அனுப்பலாமா?பாயிண்ட்டை பிடித்த திரிணாமூல் எம்பி கொல்கத்தாவில் பாஜக கலவரம்.. யோகி மாடலில் “புல்டோசர்” அனுப்பலாமா?பாயிண்ட்டை பிடித்த திரிணாமூல் எம்பி

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

சவுரவ் கங்குலிக்கு ஐபிஎல் தலைவர் பதவியை வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று மும்பையிலும் கடந்த வாரம் டெல்லியிலும் அவர் ஆலோசித்து இருக்கிறார். எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

ஐபிஎல் தலைவர்

ஐபிஎல் தலைவர்

பிரிஜேஷ் பட்டேல் வகித்து வரும் ஐபிஎல் தலைவர் பதவியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரரும் பிசிசிஐ பொருளாளருமான அருண் சிங் தூமலுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அனுராக் தாக்கூர் இதற்கு முன் பிசிசிஐ தலைவராக பதவி வகித்தவர்.

பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லாவே தொடர்வார் என்று கூறப்படுகிறது. கங்குலி வகித்து வந்த பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னியை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் பந்துவீச்சாளராக இடம்பெற்றவர் ரோஜர் பின்னி.

திரிணாமூல் குற்றச்சாட்டு

திரிணாமூல் குற்றச்சாட்டு

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல்-இல் பாஜகவின் வாரிசு அரசியல் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் குற்றம்சாட்டியுள்ளார். ஒது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "நான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா. என் தந்தை அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர். நான் ஐபிஎல் புதிய தலைவர் அருண் சிங் தூமல். என் அண்ணன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்." என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Trinamool MP Derek o brein said that, BJP dynasty politics in BCCI and IPL. He tweeted that, "I am Jay Shah, once more becoming BCCI secretary. My papa is Union Home Minister AmitShah. I am Arun Singh Dhumal, new Chairman of IPL. My elder bhaiya is Union Sports Minister."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X