மோடியை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர்.. ஆவேசமான பாஜக.. நாடு முழுக்க ஆர்ப்பாட்டம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பிலாவல் பூட்டோவின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபடும் பாஜகவினர், தனது பேச்சுக்கு பிலாவல் பூட்டோ மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, மோடி குறித்து பிலாவல் பூட்டோ தெரிவித்த விமர்சனங்கள் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடியை விமர்சித்த பாக், அமைச்சர்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதால் பொறுமை இழந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் என்றும், சர்வதேச தீவிரவாதி பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு எனவும் விமர்சித்தார். இந்நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர்தான் இந்தியாவின் பிரதமர்" என பிலாவால் பூட்டோ கூறினார்.

இந்தியா கடும் கண்டனம்
இதனிடையே, பாகிஸ்தான் அமைச்சர் பிலாவால் பூட்டோவின் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமர்சனம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானின் இந்த விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்தது. தன் மீது தீவிரவாத நாடு என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டதாலும், பழைய காலங்களை போல தீவிரவாதத்தை பயன்படுத்த முடியவில்லையே என்ற விரக்தியிலும் பாகிஸ்தான் உள்ளது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகவே பாகிஸ்தானின் இந்த விமர்சனத்தை கருத வேண்டியுள்ளது. மும்பை, நியூயார்க், புல்வாமா, பதான்கோட், லண்டன் போன்ற நகரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு உலகம் முழுக்க தீவிரவாத தடங்களை பதித்த பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்றுதான் சொல்ல முடியும். அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்றால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், பிரதமர் மோடி மீதான பாகிஸ்தான் அமைச்சரின் விமர்சனம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக நேற்று அறிவித்தது. அதன்படி, நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெற்றன.

பாக். தூதரகம் முற்றுகை
இதன் ஒருபகுதியாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ ஜர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் பிலாவலின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications