தேசிய பங்கு சந்தை மோசடி- சித்ரா ராமகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுக்கிறது சிபிஐ
டெல்லி: தேசிய பங்கு சந்தையான என்.எஸ்.இ.-ன் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய பங்கு சந்தை தொடர்பான தகவல்களை பெரும் பணம் பெற்றுக் கொண்டு தனிநபர்களிடம் தரகர்களிடம் பகிர்ந்தது, தேசிய பங்கு சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது என ஏராளமான ஊழ முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணன், அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இருவர் மீதும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி 2015-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. இருவர் மீதும் இத்தனை ஆண்டுகளாகியும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான் அண்மையில் ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சிபிஐ நீதிமன்றம்,இத்தனை ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் ஏன் இவ்வளவு தாமதமான நடவடிக்கை என கேள்வி எழுப்பியிருந்தது.
சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் இருவருமே பல்வேறு தகவல்களை சிபிஐ, செபி அதிகாரிகளிடம் மறைத்தும் வருகின்றனர். குறிப்பாக இமயமலை சாமியார் தொடர்பான விவரங்களை தெரிவிக்காமல் மழுப்பி வருகின்றனர். இந்த சாமியார்தான் ஒட்டுமொத்தமாக தேசிய பங்கு சந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். தற்போது சித்ரா ராமகிருஷ்ணனனை கஸ்டடியில் எடுப்பதன் மூலம் சாமியார் குறித்த தகவல்கள் வெளியாகக் கூடும் எனவும் தெரிகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications