டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு.. புதிய தேதியை அறிவித்த மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மார்ச் 12இல் நடைபெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மே 21இல் நடைபெறும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமே நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Center announced that PG NEET will be conducted on May 21

இதற்கிடையே முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை 6 முதல் 8 வாரங்கள் வரையில் ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.

இந்தச் சூழலில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 21ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான முதுநிலை நீட் கலந்தாய்வு நடைபெற்று வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Center announced that PG NEET will be conducted on May 21 The Center postponed the PG NEET exam that was scheduled on March 21. PG NEET exam dates 2022-23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X