நீடிக்கும் வன்முறை- மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு- மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மணிப்பூர் இனவன்முறைகளைத் தொடர்ந்து மாநில ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா,மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்த பின்னர் அமைதிக் குழுவை அமைப்பதாக அறிவித்தார். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் மைத்தேயி இன மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கூடாது என்பது குக்கி இனமக்களின் போராட்டம். இது வன்முறையாக வெடித்ததி 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி குக்கிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறது இந்த வன்முறைகள். இதனையடுத்து மணிப்பூர் வன்முறை மற்றும் சதி ஆகியவை தொடர்பாக சிபிஐ விசாரிக்கிறது. இது தொடர்பாக 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications