Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழல் பற்றியெல்லாம் மத்திய அரசுக்கு கவலை இல்லை.. கெஜ்ரிவாலை பார்த்து பயம்: சிசோடியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ நேற்று ரெய்டு நடத்திய நிலையில், "மத்திய அரசுக்கு ஊழல் குறித்து கவலை இல்லை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்துதான் கவலை" என சிசோடியா விமர்சித்துள்ளார்.

Recommended Video

    சிபிஐ ரெய்டில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

    மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் சிசோடியா தொடர்புடைய சுமார் 21 இடங்களில் சிபிஐ நேற்று சோதனையை மேற்கொண்டது.

    “Centre Worried is not about corruption: About Arvind Kejriwal” - Manish Sisodia

    சிபிஐ-யின் இந்த ரெய்டு குறித்து ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது கடும் விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

    டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் கடந்த மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதன்படி நேற்று சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டது. இந்த ரெய்டு குறித்து இன்று சிசோடியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், "மத்திய அரசுக்கு ஊழல் குறித்து கவலை இல்லை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்துதான் கவலை" என்று கூறியுள்ளார். மேலும், ரெய்டு நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    தொடர்ந்து தனது பேட்டியில் அவர் கூறியதாவது, " நேற்று அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் டெல்லி கல்வி கொள்கை குறித்து நேர்மறையாக செய்தி வெளிவந்திருக்கிறது. இது இந்தியாவுக்கே ஒரு பெருமையான விஷயம். சரியாகா 1.5 ஆண்டுகளுக்கு முன்னார் இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் கங்கை நதியில் மிதக்கும் பிணங்கள் குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது"

    "சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு நேற்று வந்தனர். அவர்கள் எனக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை மேற்கொண்டனர். மிக அருமையாக நடந்து கொண்டார்கள். உயரதிகாரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது, ஆனால் மிகவும் நேர்த்தியாக நடந்துகொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கலால் கொள்ளை நாட்டின் சிறந்த கலால் கொள்கையாகும். மேலும் இதனை நாங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயல்படுத்துகிறோம்.

    டெல்லியின் துணைநிலை ஆளுநர் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்திருந்தால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் 10,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இந்த ரெய்டுகளின் நோக்கம் என்பது மேலே குறிப்பிட்டதைப்போல ஊழல் தொடர்பானது அல்ல. அது கெஜ்ரிாவல் தொடர்பானது. அவரை தடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நான் எந்த ஊழலும் செய்யவில்லை. நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி அமைச்சர் மட்டுமே. அடுத்த 3-4 நாட்களுக்குள் நான் கைது செய்யப்படலாம். ஆனால் எங்களை உங்களால் பலவீனப்படுத்த முடியாது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி உறுதியுடன் களம் காணும்" என்று சிசோடியா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+