டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் வழக்கு.. ஹைகோர்ட்டில் முறையிடுங்கள்.. உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு!

டெல்லியில் போலீசால் நேற்று முதல்நாள் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | Jamia Millia Islamia University protest

    டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தின் போது போலீசால் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முதல்நாள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.

    Citizenship Amendment: SC to hear the case against Delhi police attack on students

    இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களை நேற்று போலீசார் தாக்கியது தொடர்பான புகாரை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி ஹைகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனு அளித்தார்.

    இந்திரா ஜெய்சிங் தனது மனுவில், டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிய வேண்டும். டெல்லி போலீஸ் மாணவர்கள் மீது தாக்கியதை முன்னாள் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் இதை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே வழக்கை தாமாக முன் வந்து பதிய முடியாது, நேற்று அவசரமாக விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டார். கலவரம் நின்றால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன். கலவரம் மொத்தமாக நிற்கட்டும், பின்பு பார்க்கலாம். மனுதாக்கல் செய்யுங்கள், நாளை விசாரிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரித்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது.

    இந்த வழக்கில் மாணவர்கள் தரப்பு வைத்த வாதத்தில், படிக்கும் மாணவர்களை ஆயுதம் ஏந்திய போலீஸ் தாக்கியுள்ளது. மாணவர்கள்தான் நமது எதிர்காலம்: அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாடே எழுந்து போராட்டம் செய்து வருகிறது. நாடு முழுக்க பெரிய புரட்சியே நிகழ்ந்து வருகிறது.

    போலீசை கல்லால் தாக்கினால் அவர்கள் என்ன செய்வார்கள்.மாணவர்கள் இப்படி வன்முறையில் ஈடுபட கூடாது.பல்கலைக்கழகம் தனியார் இடம்: அங்கு போலீஸ் அனுமதி இன்றி சென்றுள்ளது. முன்னாள் நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும், என்றனர்.

    இதை எதிர்த்த அரசு தரப்பு, மாணவர்கள் வன்முறையில் ஈடுப்பட்டார்கள். ஆனால் அவர்களை போலீஸ் கைது செய்யவில்லை. காயம் அடைந்த மாணவர்களை மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தோம் என்று கூறினார்கள்.

    இதையடுத்து உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, இந்த போராட்டம் பல மாநிலங்களில் நடந்துள்ளது. அதனால் இதை மொத்தமாக உச்ச நீதிமன்றம் விசாரித்தால் சரியாக இருக்காது. மாநில உயர் நீதிமன்றங்கள் இதை விசாரித்தால்தான் சரியாக இருக்கும்.

    அதனால் உயர் நீதிமன்றங்களை மாணவர்கள் அணுகலாம்.சம்பவம் நடந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களை மாணவர்கள் அணுகலாம். மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வழக்கை விசாரிக்கலாம்.

    மாநில உயர் நீதிமன்றம் இதில் விசாரணை ஆணையங்களை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில ஹைகோர்ட்டுகளில் இது தொடர்பான வழக்கு தொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Citizenship Amendment: SC to hear the case against Delhi police attack on students today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X