லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை மீது காகிதங்களை கிழித்து வீச்சு.. 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்
டெல்லி: சீன ஊடுருவல் விவகாரம் பற்றி லோக்சபாவில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்த காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் மேஜை மீது ஏறி ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக எம்பிக்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் அவையில் அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் உள்பட மொத்தம் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். லோக்சபாவும் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் நேற்று லோக்சபாவில் தொடங்கியது. அப்போது டோக்லாம் விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே நினைவு குறிப்பில் உள்ளதாக கூறி ராகுல் காந்தி பேச முயன்றபோது இது சபை விதியை மீறுவதாக ஆளும் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ராகுல் காந்தியை தொடர்ந்து பேசவிடாமல் அமித்ஷா, கிரன் ரிஜிஜு உள்ளிட்டோர் குறுக்கிட்டு பதில் அளித்ததால் எதிர்க்கட்சிகள் சபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று லோக்சபா மீண்டும் கூடியது. அப்போதும் என்.டி.ஏ கூட்டணி எம்பி பேசுவதற்கு தான் அனுமதிக்கப்பட்டது.
இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மேஜை மீது ஏறி ஆவணங்களை கிழித்து அவை தலைவர் இருக்கை மீது எறிந்தார். இதையடுத்து பாஜக எம்பிக்கள் காங்கிரஸ் எம்பிக்கள் மீது குற்றச்சாட்டு வைத்தனர். மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என கிரன் ரிஜிஜூ தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது எதிர்க்கட்சி எம்பிக்கள் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங், ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, பிரசாந்த் யாதவ்ராவ் படோலே மற்றும் கிரண் குமார் ரெட்டி, சு வெங்கடேசன் என 8 எம்பிக்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இவர்கள் 8 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் பங்கேற்க முடியாது. மேலும் லோக்சபாவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்படி லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?











Click it and Unblock the Notifications