டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சுர்ஜிவாலா, திக்விஜய் சிங்கிற்கு கொரோனா

Google Oneindia Tamil News

டெல்லி : நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 2.17 லட்சமாக அதிகரித்துள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமீப நாட்களாக சினிமா, விளையாட்டு, அரசியல் என பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் ஒரு புறம் தீவிரமாக நடந்து வந்தாலும், மற்றொரு புறம் நோய் பரவலும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தீவிரமாக பரவும் கொரோனாவுக்கு மத்தியில் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வு தமிழகத்தில் தீவிரமாக பரவும் கொரோனாவுக்கு மத்தியில் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வு

காங்கிரஸ் தலைவர்களுக்கு கொரோனா

காங்கிரஸ் தலைவர்களுக்கு கொரோனா

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜிவாலாவிற்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்

தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்

இது பற்றி சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை எனக்கு கொரோனா பாசிடிவ் உறுதியானது. கடந்த 5 நாட்களாக என்னுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ அவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நான் தனிமையில் இருக்கிறேன்

நான் தனிமையில் இருக்கிறேன்

திக்விஜய் சிங்கின் ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாசிடிவ் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நான் டெல்லியில் உள்ள வீட்டில் தனிமையில் இருக்கிறேன். இந்த சமயத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, உரிய பரிசோதனைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மோடி அரசை குற்றம்சாட்டி சுர்ஜிவாலா

மோடி அரசை குற்றம்சாட்டி சுர்ஜிவாலா

ஏப்ரல் 14 அன்று தான், கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் அலட்சியமாக உள்ளதாகவும், பிரதமர் மோடி கொரோனா விவகாரத்தை மிக சாதாரணமாக கையாள்வதாகவும், மோடி அரசு மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் செய்தியாளர் சந்திப்பின் போது சுர்ஜிவாலா குற்றம்சாட்டி இருந்தார்.

English summary
Senior Congress leader Randeep Surjewala and Digvijay Singh also tested positive for Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X