டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். காரிய கமிட்டி ஆக.10-ல் கூடுகிறது.. புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் ஆகஸ்ட் 10-ந் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களைத்தான் கைப்பற்றியது. இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

Congress Working Committee to meet on Aug 10

ராகுலின் ராஜினாமாவை திரும்பப் பெற வைக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. பிரியங்கா காந்தியையும் காங்கிரஸ் தலைவராக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் பிரியங்காவும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாத நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் 10-ந் தேதி காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ராஜினாமாவுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம். இதில் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

English summary
Congress general secretary K C Venugopal said that party Working Committee to meet on Aug 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X