இந்தியாவில் லேசாக குறைந்த கொரோனா! 1.5 லட்சத்தை தாண்டிய ஆக்டிவ் கேஸ்கள்! பலி எண்ணிக்கையும் உயர்வு!
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், நேற்று முன்தினம் 21,566, நேற்று 21,880 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 21,411 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

திடீர் சரிவு
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மீண்டும் பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரிப்பு, கடந்த இரண்டு நாட்களாக லேசாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினமும், நேற்றும் பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று 21,411பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 68 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை
அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 997ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 50 தாண்டியே பாதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது . கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 726 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 50 ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பெறுவோர் விகிதமும் ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 201 கோடியே 68 லட்சத்து 73 ஆயிரத்து 882 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 102 கோடியே 22 ஆயிரத்து 285 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 92 கோடியே 89 லட்சத்து 14 ஆயிரத்து 374 டோஸ்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 கோடியே 79 லட்சத்து 37 ஆயிரத்து 223டோஸ்களும் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications