Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருந்து 'எஸ்கேப்' ஆகும் ஆல்பா.. உருமாறும் கொரோனாவால் பேராபத்து..பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே வரும் நிலையில், ஆல்பா கொரோனா குறித்து அதிர்ச்சி அளிக்கும் சில முக்கிய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைப்பது என்றால் அது கொரோனா தான்.

வளர்ந்த நாடு, பின்தங்கிய நாடு என் எதையும் விட்டு வைக்காமல் அனைத்து நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு மிக மோசம்.

 கொரோனா

கொரோனா

கொரோனா வைரசை இதுவரை எந்த நாடும் முழுமையாக ஒழிக்கவில்லை. சில நாடுகள் மட்டுமே தீவிர கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளன. ஆனால், பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் இதான் முக்கிய பிரச்சினை. ஒவ்வொரு முறை கொரோனா உருமாறும்போதும், அது அடுத்த அடுத்த அலைகளை ஏற்படுத்துகிறது.

 ஆல்பா கொரோனா

ஆல்பா கொரோனா

இப்படி தான் பிரிட்டன் நாட்டில் கடந்த டிச. மாதம் முதன்முதலில் ஆல்பா கொரோனா கண்டறியப்பட்டது. இது தான் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 2ஆம் அலை ஏற்படக் காரணமாக இருந்தது. டெல்டா கொரோனா தீவிரமடையும் முன்பு பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக இருந்தது இந்த ஆல்பா கொரோனா தான். இந்நிலையில் ஆல்பா கொரோனா குறித்த சில ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

 நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

தொடர்ந்து உருமாற்றம் அடையும் ஆல்பா கொரோனா நோயெதிர்ப்பு அமைப்பு தடுக்கும் திறன்களைப் பெற்றிருக்கலாம் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வில், "நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் மனித உடலுக்குள் நுழையும்போது நமது உடலில் உள்ள செல்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கத் தொடங்கும். இதைத் தடுக்கும் முறையை ஆல்பா கொரோனா கற்றுக்கொண்டது" என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 ஏன் ஆபத்து

ஏன் ஆபத்து

இந்த ஆல்பா கொரோனா நமது காற்றுப்பாதை உணரிகளைத் தடுக்கிறது. இதனால் நமது உடலில் வைரஸ் இருப்பதைப் பற்றி நோயெதிர்ப்பு மண்டலத்தை எச்சரிக்கை செய்யும் செயல்முறை தடுக்கப்படுகிறது. இந்த சென்சார்களின் செயல்பாட்டைத் தடுக்கும் முறையை ஆல்பா கொரோனா கற்றுக்கொண்டதால், நமது உடலால் கொரோனாவை அழிக்கும் எந்த ஆன்டிபாடிகளையும் உற்பத்தி செய்ய முடியாது.

 ஆய்வாளர் கருத்து

ஆய்வாளர் கருத்து

இது குறித்து டாக்டர் லூசி தோர்ன் கூறுகையில், "முதல் அலை வைரஸ்களை காட்டிலும் நமது தற்காப்பு சென்சார்களை தவிர்ப்பதற்கான முறைகளை ஆல்பா கண்டறிந்து கொண்டது. உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியைச் செயலிழக்கச் செய்யும் அதிக வைரஸ் புரதங்களை உருவாக்குவதன் மூலம் ஆல்பா கொரோனா இதைச் செய்கிறது. இந்த புரதங்கள் N, Orf6 மற்றும் Orf9b என்று அழைக்கப்படுகின்றன. இவை தான் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கின்றன.

 வைரசுக்கு வெற்றி

வைரசுக்கு வெற்றி

இதன் மூலம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு நமது உடலால் இதைக் கண்டறிய இயலாது. இது ஒரு நபரின் மூக்கு, தொண்டை அல்லது நுரையீரலைப் பாதிக்கும் போது அது தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகளைக் கணிசமாக அதிகரிக்கிறது. கொரோனா வைரசுக்கு இது ஒரு வெற்றி. இதன் மூலம் வைரஸ் பரவல் மிக வேகமாகவும் எளிமையாகவும் இருக்கும். டெல்டா, ஓமிக்ரான் கொரோனா வகைகள் எப்படி செயல்படும் என்பதை ஆராய வேண்டும்" என்றார்.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்
     டெல்டா , ஓமிக்ரான்

    டெல்டா , ஓமிக்ரான்

    சர்வதேச அளவில் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் எந்தளவு ஆபத்தானது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் விளக்கும் வகையில் உள்ளது. இப்படித் தொடர்ந்து கொரோனா உருமாறிக் கொண்டே இருந்தால் அது வரும் காலத்தில் மேலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதனால் பொதுமக்கள் வேகமாக கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+