டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1.02 லட்சம் பேர் மீண்டனர் - 1.66 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.02 கோடி ஆக உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலக அளவில் 1.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.02 கோடி ஆக உயர்வு . உலக அளவில் கொரோனாவிற்கு 6.55 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீயாக பரவி வருகிறது. ஏழை, பணக்காரன் என்றெல்லாம் கொரோனாவிற்கு தெரியாது எல்லோரையும் தொட்டுப்பார்த்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள் கொரோனா உடன் எதிர்த்து போராடி மீண்டு வருகின்றனர். வேறு நோய் பாதிப்பு இருப்பவர்கள்தான் கொரோனாவிற்கு பலியாகி விடுகின்றனர். தினசரியும் கொரோனா தொற்றுக்கு 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Coronavirus updates : 1.02 Crore persons recovered from COVID-19

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 60,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.32 லட்சமாக உயர்ந்துள்ளது. அங்கு ஒன்றரை லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.
பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.42 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.34 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 14.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 33 ஆயிரம் பேர் வரை கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 9 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருக்கின்றனர்.

கொரோனா காலத்திலும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கொடுக்கிறோம் - தமிழக அரசு ஹைகோர்ட்டில் தகவல் கொரோனா காலத்திலும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கொடுக்கிறோம் - தமிழக அரசு ஹைகோர்ட்டில் தகவல்

பிரிட்டனில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டன் தற்போது 10வது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ்க்கு இன்னமும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை. அப்படி இருந்தும் தற்போது கொடுக்கப்படும் சிகிச்சைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1.02 கோடி பேர் மீண்டு உலக மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளனர். கொரோனா தொற்று பாசிட்டிவ் என உறுதியானாலே பயப்பட வேண்டாம். சரியான சத்தான உணவு சாப்பிட்டு அரசு கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து மீளலாம் என்று நம்பிக்கை தருகின்றனர் 1 கோடி பேர்.

கொரோனா காலத்திலும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கொடுக்கிறோம் - தமிழக அரசு ஹைகோர்ட்டில் தகவல்

English summary
More than 1.02 crore persons have been cured of COVID-19 and discharged till now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X