டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு.. பள்ளிகளை மூடுவது நியாயமில்லை.. உலக வங்கி கல்வி இயக்குனர் சொல்கிறார்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காரணமாக பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கூறியுள்ளார். புதிய அலைகள் இருந்தாலும், பள்ளிகளை மூடுவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஹிஜாப் அணிந்தால் அனுமதி இல்லை.. கர்நாடக கல்லூரியில் 3 வாரமாக தடுக்கப்படும் இஸ்லாமிய மாணவிகள்.. பரபர ஹிஜாப் அணிந்தால் அனுமதி இல்லை.. கர்நாடக கல்லூரியில் 3 வாரமாக தடுக்கப்படும் இஸ்லாமிய மாணவிகள்.. பரபர

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிமாக உள்ள நிலையில் ஏராளமான நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன. இந்தியாவிலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளை மூட்டியுள்ளன.

எந்த ஆதாரமும் இல்லை

எந்த ஆதாரமும் இல்லை

இந்த நிலையில்தான் பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா தெரிவித்துள்ளார். கல்வித் துறையில் கொரோனாவின் தாக்கத்தைக் கண்காணித்து வரும் சாவேத்ரா, பள்ளிகளை மீண்டும் திறப்பது கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுதான் சரி

இதுதான் சரி

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வரை காத்திருப்பது பொதுக் கொள்கை கண்ணோட்டத்தில் அர்த்தமற்றது என்றும், அதற்குப் பின்னால் அறிவியல் எதுவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.பள்ளிகளைத் திறப்பதற்கும் கொரோனா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டையும் இணைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள அவர் புதிய அலைகள் இருந்தாலும், பள்ளிகளை மூடுவதை கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பார்களை மட்டும் திறக்கலாமா?

பார்களை மட்டும் திறக்கலாமா?

உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களைத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகளை மூடுவது அர்த்தமற்றது. இதற்கு எந்த மன்னிப்பும் கிடையாது என்றும் ஜெய்ம் சாவேத்ரா தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் நாம் அறியாமையின் கடலில் பயணித்தோம். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி எது என்று நமக்கு தெரியவில்லை.

குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு

குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு

பள்ளிகளைத் திறப்பது வைரஸ் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தியபோது அது இல்லை என்பதைக் காட்டியது என கூறிய ஜெய்ம் சாவேத்ரா குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் இறப்பு மற்றும் கடுமையான நோய்ஏற்படுவது மிகவும் அரிதானது. ஆபத்துகள் குறைவு என்றும் நம்பிக்கை கூட்டினார்.

English summary
World Bank Education Director Jaime Saavedra has said it is not fair to close schools because of the corona. Despite the new waves, he said closing schools should be a last resort
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X