அவதூறு செய்திகளை பரப்பினால்.. இனி கிரிமினல் வழக்குதான்.. யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு கெடுபிடி
டெல்லி: அவதூறு செய்திகளை பரப்பும் மற்றும் தேசத்துக்கு எதிராகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகளை பதிவிடும் யூடியூப் சேனல்கள் மீது க்ரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி மக்களின் பொழுதுபோக்கிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களின் அளப்பறிய வளர்ச்சியால் தற்போது கையடக்க செல்போனில் அனைத்து தகவல்களையும் நாம் பெற முடியும் அளவுக்கு உலகம் சுருங்கி விட்டது.

யூடியூப் வீடியோ
செய்திகள் முதல் படங்கள் வரை அனைத்தும் நேரடியாக இணையம் மூலமாக நம் உள்ளங்கைகளுக்கே வந்துவிட்டது என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் வளர்ந்துவிட்டது. அதிலும் தற்போது யூடியூப் உள்ளிட்ட வீடியோ தளங்களில் யார் வேண்டுமானாலும் தனியாக சேனல்களை தொடங்கிவிடலாம் என்ற நிலை உள்ளது. இதனால், சமையல், சுற்றுலா, டிரைவிங், செய்திகள், விமர்சனங்கள் என யூடியூப் பக்கங்களில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம்.

தங்கள் கருத்துக்களை
பலருக்கும் வருமானத்தை அளிக்கக்கூடியதாவும் இது மாறிவிட்டது. தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் மக்களின் வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாததாக இத்தகைய சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு அதன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அந்த வகையில், யுடியூப்பில் பலரும் தங்கெளுக்கன தனியாக சேனல்களை தொடங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தவறான தகவல்கள்
இதில் சிலரது யூடியூப் சேனல்களில் எல்லை மீறும் கருத்துக்களும் வெறுப்புணர்வை பரப்பும் வகையிலான கருத்துக்களும் வெளியாகின்றன. சிலரின் கருத்துக்கள் தேசத்துக்கு எதிராகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் பதிவிடுவதால் தேவையற்ற மோதலுக்கு இது வழிவகுப்பதாக அமைகிறது. அதேபோல், போலியான செய்திகளும் வெளியாகி தவறான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

கடும் நடவடிக்கை
இந்த நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கவும் அந்த யூடியூபர்களுக்கு எதிராக க்ரிமினல் வழக்கு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக தேசத்துக்கு எதிராகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகளை பதிவிடும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications