டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

IND vs NZ: சிஎஸ்கே வீரர் போட்ட ட்வீட்.. 3 வருடங்களுக்கு பிறகு அடித்த லக்.. என்ன விஷயம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா-நியூசிலாந்து டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கிறது.

இந்த போட்டி புதிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதேநேரம், லோக்கல் பாய் தீபக் சாஹரை மறக்க முடியுமா.

ஸ்டாலின் மிஸ் பண்ணிட்டாரே.. 2 அறிவிப்புகளை காணோமே.. நம்பிக்கையுடன் முதல்வரை எதிர்நோக்கும் மக்கள்ஸ்டாலின் மிஸ் பண்ணிட்டாரே.. 2 அறிவிப்புகளை காணோமே.. நம்பிக்கையுடன் முதல்வரை எதிர்நோக்கும் மக்கள்

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

தீபக் சஹர் சர்வதேச கிரிக்கெட்டில் 2018ம் ஆண்டு அறிமுகமானார். இருப்பினும், அவர் சொந்த மைதானத்தில் விளையாட கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆம், இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை உள்நாட்டில், துவங்கியது ராஜஸ்தான் அணிக்காகத்தான்.

சிஎஸ்கே வீரர்

சிஎஸ்கே வீரர்

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வேகப் பந்து வீச்சாளராக ஆடி வரும் தீபக் சாஹர், ட்விட்டரில் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டு ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இன்றிரவு எனது சொந்த மைதானத்தில் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு தயாராக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

முதல் முறை

முதல் முறை

முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இதற்கு முன்பும், அவர் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார், ஆனால் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். மறுபுறம், ராகுல் டிராவிட் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக முதல் முறையாக களம் இறங்குகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தங்களது மோசமான ஆட்டத்தை மறந்து இன்று சவாய் சிங் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சிறப்பாக ஆட விரும்புகிறது.

உலக கோப்பை

உலக கோப்பை

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடைபெற இன்னும் பதினோரு மாதங்கள் மட்டுமே உள்ளன. இதற்கிடையில், புதிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு சிறந்த அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு சரியாக அமையவில்லை என்பதால் தவறுகளை திருத்த இந்த போட்டித் தொடரை பயிற்சி களமாக இந்திய அணி பார்க்கிறது.

English summary
Ind vs NZ: The India-New Zealand T20 series starts today. The first match of the three-match series is being played in Jaipur, Rajasthan. The match was very special for the new captain Rohit Sharma and the new coach Rahul Dravid. At the same time, can you forget local boy Deepak Chahar?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X