கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்களுக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடிய அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா இந்த அளவுக்கு குறைய காரணம் மருத்துவர்கள் மட்டும்தான்.

மருத்துவர்கள் அர்ப்பணிப்பு
மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையே கொரோனா குறைய மிகப்பெரும் காரணம். இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின்படி கொரோனா முதல் அலையில் பணியில் ஈடுபட்டிருந்த 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். கொரோனா 2-வது அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளது.

பாரத ரத்னா வழங்கணும்
இந்நிலையில் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு பாரத ரத்னா விருது ஒரு" இந்திய மருத்துவருக்கு "வழங்கப்பட வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இதன் மூலம் நான் எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் குறிக்கவில்லை.

தன்னலமற்ற சேவை
கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். லட்சக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி கவலைப்படாமல் தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்தனர்.

உண்மையான கவுரவம்
அவர்களை கவுரவிக்கவும், நன்றி சொல்லவும் இதைவிட சிறந்த வழி என்ன? இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications