பீஸ் பீஸா போன "கணக்கு".. காங்கிரஸ் கண்ணை உறுத்திய மோடியின் கலர்ஃபுல் டிரஸ்.. சுளீர்னு சொன்ன பிரதமர்
டெல்லி: 250 ஜோடி துணிகள் வைத்திருந்தது தான் என் மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் குற்றச்சாட்டு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஃபேமஸ் ஆனவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி.. பிரபலமான உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதன்மையானவராகவே கருதப்பட்டு வருகிறார். அதேபோல, மோடியின் டிரஸ்களும் எப்போதுமே உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வருவது இயல்பான ஒன்று.

டிரஸ்கள்: இதற்கு காரணம், பிரதமர் அணியும் டிரஸ்கள் எப்போதுமே கலர்ஃபுல்லாக இருக்கும்.. எந்த பகுதிக்கு உரையாற்ற செல்கிறாரோ, அந்த இடத்தின் கலாச்சார பின்னணிக்கு ஏற்றவாறும், அந்தந்த பிராந்தியத்தின் பின்னணியை கொண்டும், தன்னுடைய ஆடைகளை தேர்வு செய்து அணிவது, மோடியின் கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாகும்.. தங்களது கலாச்சார ஆடையை, நாட்டின் பிரதமர் அணியும்போது, அந்தந்த பகுதி மக்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய்விடுவார்கள்..
ஆனால், பிரதமர் அணியும் ஆடைகள் மிகவும் காஸ்ட்லியாக இருப்பதாகவும், பல லட்சம் மதிப்பிலான ஆடைகளையே எப்போதும் மோடி அணிவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன..
தேர்தல் பிரச்சாரம்: அந்தவகையில், தற்போது முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் டிரஸ் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.. வெறும் ரூ1.6 லட்சம் சம்பளம் வாங்கும் பிரதமர் மோடி, பல லட்சம் மதிப்பிலான ஆடைகள் அணிவதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்..
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் பேட்டி தந்துள்ளார்.. இந்த பேட்டியில், குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவங்களை மோடி நினைவு கூர்ந்தார்...
குஜராத்: அப்போது, "நான் 250 ஜோடி ஆடைகள் வைத்திருப்பதாக குஜராத் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான அமர்சிங் சவுத்ரி சொல்கிறார்.. 250 கோடியை திருடிய முதல்வர் வேண்டுமா அல்லது 250 ஜோடி உடைகள் வைத்திருப்பவர் வேண்டுமா என்று நான் மக்களிடம் கேட்டேன். 250 ஜோடி உடைகள் கொண்ட முதல்வர்தான் வேண்டும் என்று குஜராத் மக்கள் ஒரே குரலில் பதிலளித்துவிட்டார்கள்.. சவுத்ரி பிசகி கணக்கு பிசவிட்டது.
இப்போதும் கூட நான் இதே குற்றச்சாட்டை எதிர்கொள்கிறேன்.. ஆனால் அந்த எண்களில் தவறு உள்ளது.. 250ல் பூஜ்ஜியம் என்பது தவறு.. . என்னிடம் இருக்கும் உடைகளின் எண்ணிக்கை என்பது 250 அல்ல.. வெறும் 25 அல்லது 50தான்.
வித்தியாசம்: பிராண்ட் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? என்றெல்லாம் எனக்கு தெரியாது. என்னுடைய அரசியல் வாழ்க்கையையும் அன்றாட பணிகளையும் மக்கள் பார்க்கிறார்கள்.. குஜராத்தில் 13 வருடம் முதல்வராகவும், 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்து வருகிறேன்.. என் வாழ்க்கை வித்தியாசமானது என்பதை நாடு புரிந்து கொள்ள முடியும்" என்றார் பிரதமர் மோடி.
தொடர்ந்து சொல்லிவரும் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மறுத்து, பிரதமர் மோடி தந்திருக்கும் இந்த பதில்கள், இணையதளத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications