டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை செய்யுங்க.. தேர்தலில் முறைகேடு நடக்காது.. ஆணையத்திற்கு முன்னாள் அதிகாரிகள் அசத்தல் ஐடியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் அதிகாரிகள் அசத்தல் ஐடியா!- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு இல்லாமல் வாக்குப்பதிவு நடக்க முன்னாள் ஆட்சிப்பணியாளர்கள் 73 பேர் நல்ல ஐடியா ஒன்றை அளித்து இருக்கிறார்கள். வித்தியாசமான ஐடியா ஒன்றை அவர்கள் அளித்துள்ளனர்.

    இந்தியா லோக்சபா தேர்தலுக்காக தயாராகிக் கொண்டு இருக்கிறது. அதே சமயம் வாக்குப்பதிவு எந்திர பிரச்சனையும் உச்சம் அடைந்து இருக்கிறது.

    வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. பாஜக தேர்தல்களில் வெற்றிபெறுவது இப்படித்தான் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கூட புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    யார் இவர்கள்

    யார் இவர்கள்

    இந்த நிலையில் 73 முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இதுகுறித்து கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அளித்து இருக்கிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் முறைகேடு நடக்காமல் எப்படி வாக்குப்பதிவை நடத்துவது என்று அவர்கள் ஐடியா கொடுத்து இருக்கிறாரகள். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய அதிகாரிகள் கூட இதில் இடம்பெற்றுள்ளனர்.

    என்ன சொன்னார்கள்

    என்ன சொன்னார்கள்

    அதன்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் விவிபாட் ''verifiable voter paper audit trail'' எனப்படும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று இவர்கள் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் சில மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அதை வேறு விதத்தில் பயன்படுத்த இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    என்ன செய்ய வேண்டும்

    என்ன செய்ய வேண்டும்

    அதன்படி வாக்கு எண்ணிக்கையின் போது, ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ண வேண்டும். அப்படி எண்ணும் பட்சத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்ததா, இல்லையா என்பதை கண்டுபிடித்துவிட முடியும். இரண்டிலும் கணக்கு சரியாக வந்தால் முறைகேடு நடக்கவில்லை. நேர்மையான முடிவுகளை அறிவிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    அதன்படி ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தை வெறும் ஒப்புகை அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த கூடாது. அதை வைத்துதான் தேர்தல் முடிவுகளை சரி பார்க்க வேண்டும். வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியப்படுத்த மட்டும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்த கூடாது என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    மொத்தமாக குறையும்

    மொத்தமாக குறையும்

    இதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யவே முடியாது. சோதனை செய்து பார்க்க ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் இருப்பதால் முறைகேடு நடக்காது. மக்களுக்கும் நம்பிக்கை வரும். அதனால் வாக்கு சீட்டு முறைக்கு செல்வதற்கு பதில் இதை செய்யலாம் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    என்ன எண்ணிக்கை

    என்ன எண்ணிக்கை

    அதேபோல் ஒரு பகுதியில் இருக்கும் மக்கள் தொகையை வைத்துதான் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதுவரை முறையின்றி இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுவும் கூட முறைகேட்டிற்கு வழி வகுக்கும். அதனால் ஒரு பகுதியில் உள்ள மக்களின் தொகையை வைத்தே அங்கு அளிக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    English summary
    Do this, No can tamper EVM after that, says 73 Former IAS, IPS in a letter to Election Commission of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X