டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீங்க முக்கியம் இல்லை".. டேட்டாவோடு வந்த டிராவிட்.. இந்திய வீரர்களிடம் ஸ்டிரிக்ட்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணிக்குள் பல புதிய மாற்றங்களை விரைவில் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Dravidடின் Data! Players முக்கியம் இல்ல, Team தான் | IND vs NZ | OneIndia Tamil

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. நாளை (நவம்பர் 17ம் தேதி) நடக்க உள்ள டி 20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இளம் இந்திய டி 20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

    இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆட உள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியோடு இணைந்து தீவிர பயிற்சி வழங்கி வருகிறார்.

    மொத்தம் 400 காமுகர்கள்.. 16 வயது சிறுமி 6 மாதங்களாக பலாத்காரம்.. உறைய வைக்கும் சம்பவம்! மொத்தம் 400 காமுகர்கள்.. 16 வயது சிறுமி 6 மாதங்களாக பலாத்காரம்.. உறைய வைக்கும் சம்பவம்!

    கண்டிப்பு

    கண்டிப்பு

    இந்த நிலையில் ரவி சாஸ்திரி போல ராகுல் டிராவிட் அவ்வளவு நட்பாக இருக்க மாட்டார், கொஞ்சம் கண்டிப்பாக இருப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக வீரர்களுக்கு பயிற்சியின் போது போதிய சுதந்திரம் அளித்தாலும் டிராவிட் பல இடங்களில் வீரர்களிடம் கண்டிப்பு காட்டியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் வீரர்களின் தனிப்பட்ட ரெக்கார்ட்டுக்காக, பார்மிற்காக அவர்களை களமிறக்க முடியாது.

    தேவை

    தேவை

    அணிக்கு தேவைப்பட்டால் மட்டுமே எடுக்க முடியும்.. நீங்கள் முக்கியம் இல்லை, அணிதான் முக்கியம் என்று டிராவிட் கண்டிப்புடன் கூறியதாக தகவல்கள் வருகின்றன. இந்தியாவின் பேட்டிங் கோச் பராஸ், வீரர் கே. எல் ராகுல் ஆகியோர் சமீபத்தில் அளித்த பேட்டியிலும் இதை உறுதி செய்துள்ளனர். டிராவிட் தனிப்பட்ட ரெக்கார்டுகளை பற்றி கவலைப்பட மாட்டார். அவருக்கு வீரர்களின் தனிப்பட்ட புகழ் முக்கியம் இல்லை.. அணிதான் முக்கியம். அதற்கு ஏற்றபடி வியூகங்கள் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

    உறுதி அளித்துள்ளார்

    உறுதி அளித்துள்ளார்

    அதே சமயம் ஒரு வீரர் சரியாக ஆடவில்லை என்றால் உடனே தூக்கிவிட மாட்டார். ரவி சாஸ்திரி - கோலி இந்த தவறை செய்தனர். சரியாக ஆடவில்லை என்றதும் வீரர்களை காயம் என்று சொல்லி உட்கார வைப்பதை வழக்கமாக வைத்து இருந்தனர். அதை டிராவிட் செய்ய மாட்டார். வீரர்கள் செட்டாகும் வரை போதிய வாய்ப்புகளை டிராவிட் வழங்குவார் என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    லோக்கல் டேட்டா

    லோக்கல் டேட்டா

    அதோடு டிராவிட் அணிக்கு வரும் முன்பே பெரிய டேட்டா ஒன்றோடு களமிறங்கி உள்ளார். சிராஜ், இஷான், ஆவேஷ், பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் ராகுல் டிராவிட்டின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்தவர்கள். அண்டர் 19 அணியில் இவர்களை உருவாக்கியது டிராவிட்தான். இவர்களின் முழுக்க டேட்டா டிராவிட்டிடம் உள்ளது. அதேபோல் மற்ற வீரர்களின் லோக்கல் போட்டி டேட்டாவும் உள்ளது.

    ஆல் ரவுண்டர் கவனம்

    ஆல் ரவுண்டர் கவனம்

    இதனால் உள்ளூர் போட்டி டேட்டாவை வைத்த ராகுல் டிராவிட் வீரர்களுக்கு வாய்ப்பு தருவார். ஐபிஎல்லை வைத்து அவர் வாய்ப்பு கொடுக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு வியூகம், அவர்களின் டேட்டாபடி ஆலோசனை உள்ளிட்ட பணிகளை டிராவிட் செய்வார் என்கிறார்கள். எல்லாம் போக கபில் தேவ் ஒரு ஆல் ரவுண்டரை ராகுல் டிராவிட் தேடிக்கொண்டு இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    பாஸ்ட் பவுலர்

    பாஸ்ட் பவுலர்

    பாஸ்ட் பவுலர்கள் மீது டிராவிட் எப்போதுமே கவனம் செலுத்துவார். அண்டர் 19ல் பலர் 150 கிமீ வேகத்தில் வீச ராகுல் டிராவிட் பயிற்சியாளர் குழுதான் காரணம். அதேபோல்தான் இந்திய அணியிலும் பாஸ்ட் பவுலர் மற்றும் பாஸ்ட் பவுலர் ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு தர டிராவிட் எண்ணுகிறார். அதனால்தான் வெங்கடேஷ் ஐயருக்கு இவ்வளவு வேகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறுகிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.

     தீர்வு

    தீர்வு

    மிடில் ஆர்டரில் 5வது பேட்ஸ்மேன் யார், ஸ்பின் இணை யார் என்பதையும் தீர்க்கும் பணியும் டிராவிட் இறங்கி உள்ளார் என்கிறார்கள். இந்த நியூசிலாந்து தொடர் அவருக்கு ஒரு டெஸ்டிங் தொடர்தான். வீரர்களில் யாரை வைக்கலாம், யாரை நீண்ட காலம் பயன்படுத்தலாம் என்பதை எல்லாம் டிராவிட் இந்த தொடரில்தான் கண்டுபிடிப்பார். அதன்பின் அண்டர் 19 அணியில் செய்தது போல சீனியர் அணியிலும் மாற்றங்களை செய்வார் என்கிறார்கள்.

    English summary
    Rahul Dravid and his data: How new coach will go for a new approach in Team India against New Zealand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X