3ம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளது.. ஐசிஎம்ஆர் மருத்துவர் எச்சரிக்கை
டெல்லி: மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளது என்று ஐசிஎம்ஆர் மருத்துவர் டாக்டர் சாமிரான் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஒருவாரமாக தினமும் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. நாடு முழுக்க தற்போது 3,70,275 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. 3,19,18,809 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4,38,486 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கேரளாவில் மட்டும் 2,12,596 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.
அங்கு தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவலின் போது தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் சமீரான் பண்டா எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மூன்றாம்
இன்று ஐசிஎம்ஆர் மருத்துவர் டாக்டர் சாமிரான் பாண்டா அளித்த பேட்டியில், மூன்றாம் அலை இன்னும் 2 அல்லது 3 மாவட்டங்களில் அதிகரிக்கும் கருதப்பட்டது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை. ஏனென்றால் இப்போதே மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளது. விழா காலங்கள், பண்டிகைகள் காரணமாக கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அறிகுறி
அதிக அளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவல் திடீரென அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மக்கள் கூடும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இரண்டாம் அலையோடு ஒப்பிட்டால் மூன்றாம் அலை பாதிப்பு குறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் மூன்றாம் அலையில் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

அதிக கூட்டம்
இதனால் அதேபோன்ற மாநிலங்கள் கொரோனா வேக்சின் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த மாநிலங்கள் கூடுதல் வேக்சின் செலுத்தினால் மூன்றாம் அலையை தவிர்க்க முடியும்.அதேபோல் இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்படாத மாநிலங்களில் லாக்டவுன் தளர்வுகளை மொத்தமாக கொண்டு வர கூடாது. கேரளா மற்றும் மிசோரத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

வேக்சின்
கொரோனா நோயாளிகள் அதிக அளவிற்கு பலருக்கு நோயை பரப்புவதே அங்கு கேஸ்கள் அதிகரிக்க காரணம். ஆனால் கேரளாவில் நோயாளிகள் முறையாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள். செரோ சர்வே அடிப்படையில் ஏற்கனவே 6-17 வயது குழந்தைகள் 50 சதவிகிதம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுவிட்டனர். இவர்களின் உடலில் ஆண்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வேக்சின் செலுத்துவது அவசரம் காட்ட கூடாது. முதலில் வயதானவர்கள், 18க்கும் அதிகமான வயது கொண்டவர்களுக்கு வேக்சின் போடுவதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications