ஐரோப்பா மட்டும் வாங்கலையா? அமெரிக்காவிற்கு "ஷார்ப்" பதிலடி தந்த ஜெய்சங்கர்.. இந்தியா துணிச்சல்!
டெல்லி: ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு பதிலடிகொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகருமான தலீப் சிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தில் இந்திய - ரஷ்யா இடையிலான உறவை அவர் விமர்சனம் செய்தார்.
ரஷ்யாவுடன் எந்த நாடும் பொருளாதார ரீதியாக உறவு மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் உறவு மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவுடன் தற்போது இந்தியா மேற்கொள்ளும் கூடுதல் கச்சா எண்ணெய் வர்த்தகம் தவறானது கிடையாது.

இந்தியா ரஷ்யா
ஆனால் அதை வேகமாக அதிகரிக்க கூடாது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிகமாக ரஷ்யாவை நம்பி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அனைத்திற்கும் ரஷ்யாவை நம்பி இருக்கக் கூடாது. டாலரை அடிப்படையாக கொண்ட வர்த்தகத்திற்கு எதிரான வர்த்தகத்தை எங்கள் நட்பு நாடுகள் மேற்கொள்வதை நாங்கள் விரும்ப மாட்டோம், என்று அவர் குறிப்பிட்டார். அதாவது கூடுதல் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும், ரஷ்யாவுடன் இந்தியா ரூபீள் வர்த்தகத்தை மேற்கொள்ள இருப்பதை தலீப் சிங் விமர்சனம் செய்து இருந்தார்.

அமெரிக்கா விமர்சனம்
இதற்கு நேற்று அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நேற்று இந்தியா - யுகே இடையிலான முதல் India-UK Strategic Futures Forum நிகழ்ச்சியில் யுகேவின் வெளியுறவுத்துறை செயலாளர் ட்ரூஸ் உடன் அவர் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கரிடம் இந்தியா - ரஷ்யா உறவு, எண்ணெய் வர்த்தகம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் நல்ல டீல் கிடைத்தால் அதை வாங்குவதில் தவறு என்ன? இது இந்தியாவின் தனிப்பட்ட முடிவு.

ஜெய்சங்கர் பதிலடி
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஐரோப்பாவும் கூட ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் பிப்ரவரியில் ஐரோப்பா வாங்கிய எண்ணெய்யை விட 15 சதவிகிதம் அதிகமாக மார்ச்சில் வாங்கி உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு எதிராக மட்டும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்களோ என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது.

ரஷ்யா எண்ணெய்
எண்ணெய் விலை உயரும் போது மார்க்கெட்டில் குறைவான விலைக்கு விற்கும் நாட்டிடம் செல்வது சாதாரண நடைமுறைதான். அதை எல்லா நாடுகளும் செய்யும். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். ரஷ்யாவிடம் அதிகம் எண்ணெய் வாங்கும் நாடு ஐரோப்பாதான். நாங்கள் அதிகமாக எண்ணெய் வாங்குவது மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து. அமெரிக்காவிடம் இருந்து 8 சதவிகிதம் எண்ணெய் வாங்குகிறோம்.

ரஷ்ய எண்ணெய்
ரஷ்யாவிடம் இருந்து வெறும் 1 சதவிகிதம் மட்டுமே எண்ணெய் வாங்குகிறது. இன்னும் 3 மாதம் கழித்து பார்த்தாலும் இந்த நிலை மாறாது. 3 மாதங்களுக்கு பிறகும் ரஷ்யாவிடம் அதிகம் எண்ணெய் வாங்கும் பட்டியலில் நாங்கள் இருக்க மாட்டோம். அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் வேறு நாடுகள்தான் இருக்கும். ஆனால் இந்தியா மீதுதான் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

ஷார்ப் பதிலடி
உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட உண்மையான பொருளாதார பாதிப்புகள் இனிதான் நமக்கு தெரிய வரும். இனிதான் அதன் பாதிப்புகளை நாம் உணர்வோம், என்று ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவின் தலீப் சிங் விமர்சித்து இருந்தார். இது சர்ச்சை ஆன நிலையில்தான் இப்போது ஜெய்சங்கர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications