டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரோக்கிய சேது ஆப்பிலும் போலி.. கைவரிசை காட்டிய பாகிஸ்தான்.. ராணுவத்தினருக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட போலியான ஆரோக்கிய சேது ஆப் பரவி வருவது குறித்து ராணுவ வீரரகள் மற்றும் துணை ராணுவ படையினருக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Arokiya Sethu App Tamil | ஆரோக்கிய சேது App-ஐ எப்படி பயன்படுத்துவது?

    இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி உடன் கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் மொபைலில் உள்ள செயலியின் மூலம், "நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நபரின் அருகில் உள்ளீர்கள்" என்று எச்சரிக்கும் வகையில் ஆரோக்கிய சேது ஆப்பை மத்திய அரசு வடிமைத்து மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது.

     fake Aarogya Sedu app, army alert troops, paramilitary forces

    தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செயலி உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் தகவல்களை 'ஆரோக்கிய சேது' வழங்கி வருகிறது. இதனை அனைத்து பொதுமக்களும் தங்கள் மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது.

    இந்நிலையில் இந்திய ராணுவத்தினரிடம் இருந்து தகவல்களை திரட்ட பாகிஸ்தானால் இருந்து உருவாக்கப்பட்ட போலியான ஆரோக்கிய சேது ஆப் இணையதளங்களில் உலாவி வருகிறது என இந்திய ராணுவம் தனது படை வீரர்கள் மற்றும் துணை ராணுவத்தினரை எச்சரித்துள்ளது.

    வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் மூலம் பாகிஸ்தான் உருவாக்கிய போலியான ஆரோக்கிய சேது ஆப் பரவி வருவதாகவும் அதை யாரும் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டாம் என்றும் படை வீரர்களை இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

    அப்படி ஒருவேளை இன்ஸ்டால் செய்தால் face.apk, imo.apk, normal.apk, trueC.apk, snap.apk and viber.apk போன்ற மால்வேரைகளயம் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்கிறது அந்த ஆப். இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை தங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்துவிடுகிறது. அத்துடன் தகவல்களை சேகரிக்கிறது. இதற்கான சர்வர் நெதர்லாந்தில் இருப்பதாக காட்டுகிறது என்ற ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

    தற்போதைய நிலையில் ஆரோக்கிய சேது ஆப்பை 'mygov.in' என்ற இணையதளத்தில் உள்ள லிங்கில் இருந்து மட்டும் டவுன்லோடு செய்து பயன்படுத்துமாறும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    army alert troops, paramilitary forces fake 'Aarogya Sedu app, this is malicious Pakistan-propped mobile app
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X