Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிசேரியன்கள் குறைவு.. கருத்தடைகள் அதிகம்.. 50% பெண்கள், குழந்தைகளுக்கு அனிமியா.. NFHS-5-ன் ஆய்வு

தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை தகவல் தற்போது வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய குடும்ப நல அமைச்சகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஒரு பெண்ணின் சராசரி கருத்தரிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களின் கருத்தரிப்பு விகிதாசாரம் மொத்தமாக 2.2 சதவீதத்திலிருந்து 2.0 ஆக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் என்எப்எச் சர்வே எனப்படும் மத்திய குடும்ப நல அமைச்சர் ஒரு கணக்கெடுப்பு எடுக்கும். அதன்படி, மக்கள்தொகை, இனப்பெருக்கம், குழந்தைகளின் நலன், குடும்ப நலன், குழந்தைகள் பெண்களின் ஊட்டச்சத்து அவர்களின் ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்வதே இதன் பணியாகும்.

இந்த ஆய்வுகள், இந்தியாவில் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலம் சார்ந்த உண்மைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள உதவும்.. அதேபோல இதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும் உதவும்..

முடிவுகள்

முடிவுகள்

அப்படித்தான் NFH சர்வே5-ன் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் கடந்த வருட இறுதியில் வெளியானது.. மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.. இப்போது NFH சர்வே5-ன் 2-ம்கட்ட ஆய்வுகள் எடுக்கப்பட்டு, அந்த முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சண்டிகர், சத்தீஷ்கர், ஹரியானா, அருணாசல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தரகாண்ட், உபி என மொத்தம் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு நடந்தி முடிக்கப்பட்டது.

குழந்தைகள் பிறப்பு

குழந்தைகள் பிறப்பு

அதில் ஏராளமான தகவல்கள் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.. அதில் சில முக்கிய தகவல்கள் இவைகள்தான்: ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறப்பு விகிதமானது, 79 சதவீதம் முதல் 89 சதவீதமாக அதிகரித்துள்ளது.. புதுச்சேர் மற்றும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு 100 சதவீதத்தை எட்டிவிட்டது.. 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த விகிதாசாரம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது.

 அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைகள்

அதேபோல, ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகி உள்ளது.. அதிலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் விகிதம் அதிகரித்துள்ளது.. என்றாலும், குடும்ப நல அறுவை சிகிச்சைகள் 13 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது. 12-23 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இயக்கம் 62 சதவீதத்திலிருந்து 76 சதவீதம் என மேம்பட்டுள்ளது... இதே வயது பிரிவினரில் முழுமையான தடுப்பூசி இயக்கம் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11-ல் 4-ல் 3 பங்குக்கும் அதிகமாக உள்ளது. இதில் அதிகபட்ச விகிதத்தில் ஒடிசா உள்ளது.

 நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

ஆய்வு செய்த மாநிலங்களில் 12 மாதம் முதல் 23 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி விகிதம் 62 சதவீதமாக இருந்த நிலையில், அது இப்போது 76 சதவீதமாக உயர்ந்துள்ளது.. இதில், ஒடிஸா மாநிலமானது, குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை 90 சதவீதத்தை பெற்றுள்ளன... குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி இந்த 4 வருஷத்தில் அதிகமாகி உள்ளதற்கு முக்கியமான காரணமே "இந்திர தனுஷ் மிஷன்' என்ற மத்திய அரசின் சிறப்பு திட்டம்தான்.

 எடை குறைவு

எடை குறைவு

அதேபோல குழந்தைகளின் ஊட்டச்சத்து விகிதம், முதல் கட்ட ஆய்வை விட இப்போது சற்று அதிகரித்து காணப்படுகிது.. ஊட்டச்சத்து விகித குறைபாடு 38 சதவீதமாகவும், உணவை வீணாக்குவது 21 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகவும் குறைந்து காணப்படுகிறது.. எடை குறைந்து பிறந்த குழந்தைகளின் விகிதம் 36 சதவீதத்தில் இருந்து 32 சதவீதத்துக்கு குறைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தவிர, கருத்தடை செய்வதில் மற்ற மாநிலங்களில் ஒட்டுமொத்த கருத்தடை செய்யப்படும் விகிதம் 54 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 ரத்த சோகை

ரத்த சோகை

14 மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைளுக்கு ரத்தசோகை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. இத்தனைக்கும் கர்ப்பிணிகளுக்கு 180 நாட்களுக்கு இரும்பு சத்து மாத்திரை தரப்பட்டது.. அப்போதுகூட ரத்தசோகை அவர்களுக்கு நீங்கவில்லை.. 6 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவது 2015-16-ல் 55 சதவீதமாக இருந்தது... அதுவும் இந்த முறை 64 சதவீதமாக உயர்ந்துள்ளது.. பெண்களின் கருத்தரிப்பு விகிதமானது, 2.2 சதவீதத்திலிருந்து 2.0ஆக குறைந்துள்ளது...

 வங்கி கணக்கு

வங்கி கணக்கு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உபி மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் 2.1 சதவீதம் என்ற இலக்கை இவை எட்டி உள்ளன. பெண்களுக்கு அதிகாரம், வங்கி கணக்குகளை பெண்கள் கையாளுதல் போன்றவையும் 53 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக அதிகரித்துள்ளன... மத்திய பிரதேசத்தில் இது 37 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.. ஆனால், மற்ற மாநிலங்களில் 70 சதவீத பெண்கள் வங்கி கணக்குகளை கையாளுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+