உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இந்தியாவில் படிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு.. மாணவர்கள் மகிழ்ச்சி
டெல்லி: வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்துவிட்டு எதிர்பாராத சிக்கல்களால் பயிற்சி மருத்துவம் முடிக்காதவர்கள் இந்தியாவிலேயே அதை பயிற்சி மேற்கொள்லாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனில் போர் நடந்துவருகிறது. இதனால் அங்கு தங்கி படித்துவந்த மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப செல்கின்றனர்.
இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இருபது ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளனர். உக்ரைனில் 7 மருத்துவகல்லூரிகளில்ல் பெருமபாலான இந்தியர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.

உக்ரைன்
இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடப்பதால், அங்கிருந்து தப்பித்து அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் இந்தியா வருகின்றனர். இன்னும் பல இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ரஷ்யா நடத்திய தாக்குதலில், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவன் நவீன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்திய மாணவர்கள்
இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்திய மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவ ஆணையம்
அறிக்கையில், "உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

பயிற்சி
இந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவிலேயே தங்களின் பயிற்சி மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். அதற்காக வெளிநாட்டில் படித்த மாணவர்கள் எஃப்.எம்.ஜி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கோரிக்கைகளோடு வரும் விண்ணப்பங்களை மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்களே பரிசீலித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

தேர்வு
மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எஃப்எம்ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்த உறுதி செய்யலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தகுதியுடையவராக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவக் கவுன்சில்கள் வழங்கலாம். அதன்படி, மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம்.
Recommended Video

கட்டணம்
இந்த பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல் மற்ற மருத்துவர்களுக்கு நிகராகவே ஸ்டைப்பெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான இந்த அறிக்கையால், உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications