'இதில் மட்டும் கண்டிப்பா நோ ரிஸ்க்..' WHO சொன்னதை அப்படியே பின்பற்றும் இந்தியா.. ஏன் தெரியுமா??
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகளும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி, பூஸ்டர் டோஸ் பணிகளையும் தொடங்கியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 90,928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் வைரஸ் பாதிப்பு 55% அதிகரித்துள்ளது.
அதேபோல மகாராஷ்டிரா, டெல்லி என நாட்டின் பல மாநிலங்களில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பூஸ்டர் டோஸ்
இந்தியாவில் வரும் ஜன. 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 15 முதல் 18 வயதான சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகளும் கடந்த ஜன. 3ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலரும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

ஏன் முக்கியம்
பூஸ்டர் டோஸ் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் நிலையில், இது குறித்து பலருக்கும் பல வகையான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் பணிகள் குறித்து நாட்டின் நோய்த்தடுப்பு திட்டத்தின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நம்மிடம் உள்ள தரவுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, பூஸ்டர் டோஸ் தான் நமக்கு இருக்கும் முக்கிய ஆப்ஷன். இது குறித்த அனைத்து தகவல்களும் வெளிப்படையாக உள்ளது, இதை யார் வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா வேக்சின்கள்
இந்தியாவில் இதுவரை 8 வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த வாரம், Corbevax மற்றும் Covovax ஆகிய இரு புதிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்படிப் பல வேக்சின்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் எந்த வேக்சினை கொண்டு பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்பது பலருக்கும் குழப்பமானது. ஏனென்றால், உலகின் பல நாடுகளிலும் வேக்சின்களை மிக்ஸ் செய்து, அதன் தடுப்பாற்றலை ஆய்வு செய்யும் பணிகள் நடக்கிறது. இந்தியாவும் அதேபோன்ற முயற்சியை எடுக்குமா என்ற கேள்வி நிலவியது.

எந்த வேக்சின்
இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியே 12 முதல் 16 வாரக் கால இடைவெளியில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில், "பூஸ்டர் பணிகளில் Corbevax மற்றும் Covovax தடுப்பூசிகளைப் பயன்படுத்த மாட்டோம். ஒருவர் முதல் 2 டோஸ்களாக எந்த வேக்சினை போட்டுக் கொண்டாரோ அதே வேக்சின் தான் 3ஆம் டோஸாக அளிக்கப்படும். இந்தியாவில் மக்கள் மீது வேக்சின் மிக்ஸ் செய்து அளிக்கப்பட மாட்டாது" என்று குறிப்பிட்டார்.
Recommended Video

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் சில நாடுகள் இந்த வேக்சின் மிக்ஸிங் முறையைப் பின்பற்றுகிறது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு இதுவரை வேக்சின் மிக்ஸிங் செய்யலாம் என எங்கும் குறிப்பிடவில்லை. இது தொடர்பாகக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், "தடுப்பூசி மிக்ஸிங் தடுப்பாற்றலை அதிகரிப்பதாக நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னரும் உலக சுகாதார அமைப்பு வேக்சின் மிக்ஸிங் முறைக்கு ஆதரவாக எந்த கருத்தும் கூறாத நிலையில், மத்திய அரசும் அதே நிலைப்பாட்டை இப்போது எடுத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications