"என்னை துண்டு துண்டாக வெட்டி விடுவான்".. 2 ஆண்டுகளுக்கு முன்பே.. போலீஸில் புகார் தந்த சாரதா.. ஷாக்
டெல்லி: டெல்லியில் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் சாரதா, தனக்கு நடக்கப்போகும் ஆபத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அப்தாப்பின் குரூர மனதையும், சைக்கோ ரூபத்தையும் தெரிந்துகொண்ட சாரதா, தனது நண்பர்களுடன் காவல் நிலையத்துக்கு சென்று அவர் மீது புகார் அளித்த விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அப்பொழுதே இந்த விஷயத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று சாரதா காப்பாற்றப்பட்டிருப்பார் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

நாட்டை உலுக்கிய 'சைக்கோ' கொலை..
டெல்லியில் தன்னுடன் லிவிங் உறவில் இருந்த தனது காதலி சாரதாவை அப்தாப் என்ற இளைஞர் கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடரந்து அப்தாப்பை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாரதா கொலை செய்யப்பட்டதை விட, அப்தாப்பிடம் போலீஸார் நடத்தி வரும் விசாரணையில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து தினமும் அதிர்ச்சி அளித்து வருகின்றன. சாரதாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அதை ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருந்தது; வீட்டில் சாரதா உடல் இருந்த போதே, பெண்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்தது, தினமும் சாரதாவின் வெட்டப்பட்ட தலையை பார்த்து பேசுவது என அப்தாப் அளித்துள்ள வாக்குமூலங்கள் அவர் சைக்கோ என்பதையே நிரூபித்துள்ளது.

சரியாக கணித்த சாரதா..
ஏராளமான பெண்களுடன் பழக்கம் வைத்திருந்ததால் அப்தாப்புக்கும், சாரதாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் சாராதவை அப்தாப் கொடூரமாக தாக்கியும் இருக்கிறார். இதனால் உடலில் காயங்களுடனே சாரதா அலுவலகத்துக்கு சென்று வந்திருக்கிறார். இதனிடையே, அப்தாப்பின் செல்போனை ஒரு முறை எதேச்சையாக பார்த்த போது, பல சைக்கோ திரைப்படங்கள் இருந்திருக்கின்றன. மேலும், அந்தப் படங்கள் யாவும் உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யும் சைக்கோ கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்ட்ட திரைப்படங்கள ஆகும். இதனால் என்றாவது ஒரு நாள் தன்னையும் அப்தாப் இப்படி கொலை செய்துவிடுவான் என சாரதா கணித்துள்ளார்.

போலீஸில் புகார்..
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கால் அப்தாப்பும், சாரதாவும் வீட்டில் இருந்தே வேலை பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் வைத்திருந்த புதிய அரத்தை காட்டிய அப்தாப், "பார்த்து நடந்து கொள்" என மட்டும் கூறி சென்றுள்ளார். இதனால் பயந்துபோன சாரதா, தனது அலுவலக நண்பர்களுடன் சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் அப்தாப் மீது புகார் அளித்துள்ளார். அதில், "அப்தாப் என்னை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிடுவான். ஆனால் அது எப்போது நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை. எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அப்தாப்பே பொறுப்பு" என எழுதி இருக்கிறார்.

புகார் வாபஸால் என்ட்ரியான எமன்..
இதையடுத்து, இந்த புகார் குறித்து போலீஸார் விசாரிக்க தயாரான போது, அடுத்த நாள் காலையிலேயே காவல் நிலையத்துக்கு சென்ற சாரதா, அந்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறினார். "ஏன் திடீரென வாபஸ் பெறுகிறீர்கள்" என போஸீஸார் கேட்டதற்கு, "நேற்று ஏதோ கோபத்தில் புகார் கொடுத்துவிட்டேன்" என அவர் மழுப்பியிருக்கிறார். ஆனால், சாரதா புகாரை வாபஸ் பெற்றதே ஓராண்டு கழித்துதான் அவரது நண்பர்களுக்கு தெரியவந்திருக்கிறது. ஒருவேளை, சாரதா புகாரை வாபஸ் பெறாமல் இருந்திருந்தால், இன்று அந்த சைக்கோவிடம் இருந்து அவள் தப்பியிருப்பாள் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications