டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருப்பா எதிரில் வர்றது.. கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு டெல்லியில் பனிப் பொழிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் கடும் பனிப்பொழிவு... விமானம், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு-வீடியோ

    டெல்லி: நேற்று மழையால் போக்குவரத்து நெரிசலில் அவதியுற்ற டெல்லி மக்கள், இன்று கடும் பனியால் போக்குவரத்தில் சிக்கித் தவித்தனர்.

    வட மாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் பனி பெய்து வருவதால், சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எதிரே வரும் வாகனக்கள் பனி மூட்டம் காரணமாக கண்களுக்குத் தெரிவதில்லை.

     Heavy snow in Delhi

    சாலையும் பனிமூட்டத்தில் மூடிக் கிடப்பதால் சிறிது தொலைவு மட்டுமே சாலை வழியும் கண்ணுக்கு புலப்படுகிறது. இதனால் வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்க வேண்டி இருந்தது. பனியின் காரணமாக டெல்லியில் ரயில்களின் இயக்கம் தாமதப்படுத்தப்பட்டது.

    ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரப்பூர்வத் தகவலின் படி இன்று 21 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    மேற்கில் உத்திரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், கிழக்கில் அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் பனி மூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. மக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

    English summary
    The northern states have a severe snowfall. In the early hours of heavy snowfall, motorists in the roads are more difficult.People have suffered great loss because of the railway service. According to official information, 21 trains have been delayed by the Northern Railway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X