சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது?
டெல்லி: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி கொண்டு சீனாவுக்கு சென்று கொண்டிருந்த 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலில் இந்தியா நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. திடீரென்று இந்த 7 கப்பல்களின் ரூட் இந்தியாவுக்கு மாற்றப்பட்டதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் போரால் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடும், சீனாவும் தான் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. டிரம்ப் வரி போட்டதால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை குறைத்தது. அதற்கு பதில் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நம் நாடு அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையே தான் திடீரென்று ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கியது. இந்த போரால் கோபமடைந்த ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது கடல் வழிப்பாதையாகும். இதன் வழியாக தான் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வரும்.
ஹார்முஸ் ஜலசந்தியால் பாதிப்பு
ஈரானின் இந்த செயலால் சவுதி அரேபியா, கத்தார், ஈராக், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இந்தியா, சீனா உள்பட பிற ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கியது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி கேஸ் சப்ளையும் பாதிக்கப்பட்டது. இப்போது ஈரானிடம் பேசி நம் நாட்டுக்கு வரும் கச்சா எண்ணெய், கேஸ் கப்பல்கள் மட்டும் அவ்வப்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அரபு நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு வர வேண்டிய கப்பல்கள் இன்னும் கூட ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி தவிக்கின்றன. இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவு செய்தது. அதோடு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு வரி விதிப்போம் என்று கூறிய டிரம்பும் அதில் இருந்து பின்வாங்கினார். தற்போது சூழலில் ரஷ்யாவிடம் இந்தியா ஒரு மாதம் வரை கச்சா எண்ணெய் வாங்கலாம். அதற்கு வரி விதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்தது.
இந்தியா திரும்பிய 7 கப்பல்கள்
இது நம் நாட்டுக்கு பாசிட்டிவாக அமைந்தது. இந்நிலையில் தான் ரஷ்யாவில் 7 கப்பல்கள் கச்சா எண்ணெயுடன் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பல்கள் நடுக்கடலில் அடுத்தடுத்து ரூட்டை மாற்றி இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இந்த 7 கப்பல்களும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இதுபற்றி மத்திய அரசு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் செய்யப்படவில்லை. இருப்பினும் 7 கப்பல்களும் பாதையும் இந்தியா நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளதாக கப்பல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி என்னவென்றால் ரஷ்யா - இந்தியா இடையே நல்ல நட்பு உள்ளது.
என்ன நடந்தது?
இப்படியான சூழலில் இந்த நட்பை பிரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரியை கையில் எடுத்தார். தற்போது ஈரான் போரால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் ஜப்பான் உள்பட பல நாடுகளும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா, முடிந்தவரை ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்கு, ரஷ்யாவும் ஓகே சொல்லி உள்ளது. இருப்பினும் கூட அமெரிக்க அதிபர் டிரம்பால் எப்போது வேண்டுமானாலும் புதிய பிரச்சனை வரலாம். இதனால் ரஷ்யா முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தான் ரஷ்யா முதற்கட்டமாக சீனாவுக்கு அனுப்பி வைத்த 7 கச்சா எண்ணெய் கப்பல்களை இந்தியாவுக்கு ரூட்டை மாற்றி அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி ரஷ்யா சார்பில் சீனாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது அமெரிக்காவை ரஷ்யாவும், சீனாவும் மதிப்பது இல்லை. இருநாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பகை உள்ளது. இதனால் சீனாவுக்கு எப்போது வேண்டுமானாலும் கச்சா எண்ணெயை கொடுத்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications