சிறையில் இருந்தபடியே.. ரூ 200 கோடியை சுருட்டிய கில்லாடி சுகேஷ் சந்திரா.. என்ன நடந்தது? திடுக் தகவல்
டெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா சிறையில் இருந்தபடியே சுமார் ரூ 200 கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் எப்படி இதைச் செய்தார் என்பது குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். இவர் மீது பல்வேறு மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன.
இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர ரூ 50 கோடி லஞ்சம் வாங்கியதாக இவர் மீது வழக்கு உள்ளது. இது தவிர பல்வேறு பண மோசடி வழக்குகள், ஏமாற்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

200 கோடி ரூபாய்
பல்வேறு மோசடி வழக்கில் கைதாகியுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா தற்போது டெல்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதலி நடிகை லீனா மரியாவுடன் சேர்ந்து இவர் பல இடங்களில் பண மோசடி செய்துள்ளார். குறிப்பாக அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் சிறையிலிருந்தபடியே 200 கோடி ரூபாய் பல தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றியுள்ளார்.

சிறையில் இருந்தபடி
அதாவது சிறையில் இருக்கும் தொழிலதிபர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, தன்னை முக்கிய அரசியல்வாதி என்று கூறி அறிமுகப்படுத்திக் கொள்ளும் சுகேஷ் சந்திரா, ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார், அப்படிதான் போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷிவிந்தர் சிங் மற்றும் ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குநர் மால்விந்தர் சிங் ஆகியோருக்கு ஜாமீன் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளார்.

எப்படி
திகார் சிறையில் ஷிவிந்தர் சிங்கை சந்தித்த சுகேஷ் சந்திரா அவருக்கு ஜமீன் வாங்கி தருவதாகக் கூறி உள்ளார். வெளியே இருக்கும் என்னுடைய ஆட்களுக்குப் பணம் கொடுத்தால் உனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று கூறி உள்ளார். சிறையில் இருந்தபடியே ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை தொடர்பு கொண்ட சுகேஷ் சந்திரா தன்னை மத்திய அமைச்சரக அதிகாரிகள் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்காகக் குரலை மாற்றும் சாப்ட்வேர்களையும் அவர் சிறையில் இருந்தபடியே பயன்படுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் போல
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் உதவியாளர், உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலக ஊழியர் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயரைச் சொல்லிப் பேசியுள்ளார். கணவருக்கு எப்படியாவது ஜாமீன் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்ததால் அதிதி சிங்கும் அவர் கூறுவதை நம்பி தொடர்ந்து பணத்தை அனுப்பி வந்துள்ளார். இப்படி மட்டும் சுமார் 200 கோடி வரை பணத்தை அனுப்பியுள்ளார். இதனிடையே கடந்த ஜூலை மாதம் அதிதி சிங்கை தொடர்பு கொண்ட அமலாக்கத் துறை சுகேஷ் சந்திரா குறித்துத் தெரிவித்துள்ளனர்.

போலீசாரிடம் புகார்
அப்போதுதான் அதிதி தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்துள்ளார். அதன் பிறகு சுகேஷ் சந்திரா உடனான தனது உரையாடல்களை அமலாக்கத்துறை அறிவுறுத்தல் படி பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். இப்படியே மொத்தம் 84க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. இவை அனைத்தும் சுகேஷ் சந்திரா சிறையில் இருந்தபடி செய்துள்ளார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அதிதி சிங், இது தொடர்பாகப் புகார் அளித்த பிறகு, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குநர் மால்விந்தர் சிங்கின் மனைவி சப்னாவிடம் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

சென்னை சொகுசு பங்களா
சிறையில் இருந்தாலும் கூட இப்படி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மோசடியில் ஈடுபட்டு வரும் சுகேஷ் சந்திரா வெறும் +2 வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள இவரது சொகுசு பங்களாவில் நடத்தப்பட்ட ரெய்டில் நடத்தப்பட்டுப் பல சொகுசு கார்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அழகிரி மகன் தயாநிதி அழகிரி என்று கூறிய போலீசாரிடமே ஆள் மாறாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications